.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 1.11.2017


1.11.2017 புதன்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஐப்பசி மாதம் 15ம்தேதி.
சுக்லப்பட்சத்து (வளர்பிறை) துவாதசி திதி மதியம் 3.19 மணி வரை பின் திரயோதசி திதி.
உத்திரட்டாதி நட்சத்திரம் பின்னிரவு 5.39மணி வரை பின் ரேவதி நட்சத்திரம்.
சித்த யோகம் பின்னிரவு 5.39 மணி வரை பின் மரண யோகம்.
ராகுகாலம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை.
எமகண்டம்- காலை 7.30 முதல் 9 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை 9 முதல் 10 மணி வரை. மாலை 6 முதல் 9 மணி வரை.
சூலம்- வடக்கு.
ஜீவன்- 1; நேத்திரம்- 2;
சிவபிரதோஷம்.
துளசி விவாஹம்.
வள்ளியூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஸ்ரீ வள்ளி திருக்கல்யாணம்.
நாங்குநேரி அருள்தரும் ஸ்ரீ உலகநாயகியம்மன் வருஷாபிஷேகம்.

1.10.2017 புதன்கிழமை ராசிபலன்.

மேஷம்; ஊர் சுற்றலாம். வெளி நாடு பயணம் உருவாகும். தயரான முன்னேற்பாடுகள் செய்யுங்கள். கல்வி வேலை கிடைக்கும்.

ரிஷபம்: உயர்ந்த சிந்தனைகள் தோன்றும். டிரஸ்ட் ஆரமிப்போம் சேவைகள் செய்வீர்கள். தலைவர் பதவி கிட்டும்.

மிதுனம்: தம்பியுடையான் படைக்கு அஞ்சான் அண்ணன் தம்பிகள் சப்போர்ட் கிடைக்கும். பாகபிரிவினை பிரச்சினையில்லமால் நடக்கும்.

கடகம்; எண்ணம் ஈடேறும். திருமணம் பாக்கியம் கிட்டும். அன்புள்ளம் கொண்ட இல்லால் அமைவாள். எதிர்காலம் சிறப்பு.

சிம்மம்: உப்பு விற்க்கபோனால் மழை பொய்யும். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்யுங்கள்.

கன்னி: பெண் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பர். பெண் பார்ப்போம் பிடித்துவிடும். நிச்சயம் செய்வீர்கள். எதிர்காலம் கனவாக மாறும்.

துலாம்: மருந்து சாப்பிடுவீர் ஆரோக்கியம் சிறக்கும். மன ஆற்றல் கூடும். திறமையான நண்பர்களை சந்திப்போம். நட்பு கொள்வார்கள்.

விருச்சிகம்: விட்ட இடத்தை பிடிப்போம். பகையை வெல்லலாம். வியாபாரம் தொடங்கலாம் நல்ல லாபம் கிடைக்கும்.

தனுசு: கோவிலுக்கு சென்று மனமுருக வேண்டிய காரியம் மாலையில் நடந்துவிடும். சந்தோஷம் பெருகும். வாழ்க்கையில் சுபிட்சம் கிடைக்கும்.

மகரம்: பெற்றோர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்வீர்கள். பூர்வீக சொந்தக்காரர்கள் உதவிக்கு வருவார்கள். செல்வம் சேரும்.

கும்பம்: வெளிநாட்டு நண்பர்களுடன் கூட்டு சேர்த்து தொழில் அபிவிருத்தி செய்வீர்கள். நன்றாக சம்பாதிபபீர்கள். சொத்துக்கள் வாங்கலாம்.

மீனம்: சொத்துக்களை அடமானம் வைத்து கடன் வாங்கி தொழில் ஆரமிப்போம். நம்பிக்கை பிறக்கும். மனைவியின் பரிபூரண உதவி கிடைக்கும்.

நாளை சந்திப்போம்.

– ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Call – 9842521669. 9244621669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles