.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 13.12.2017


13.12.2017 புதன்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் கார்த்திகை மாதம் 27ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) இன்று நாள் முழுவதும் ஏகாதசி திதி.
சித்திரை நட்சத்திரம் இரவு 12.20 மணி வரை பின் சுவாதி நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை.
எமகண்டம்- காலை 7.30 முதல் 9 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை 9 முதல் 10 மணி வரை. இரவு 6 முதல் 9 மணி வரை
சூலம்- வடக்கு.
ஜீவன்-1/2; நேத்திரம்- 1;

13.12.2017 புதன்கிழமை ராசிபலன்.

மேஷம்: இஷ்ட தெய்வம் அருளால் தொழில் வளர்ச்சி உருவாகும். லாபம் விரையம் சரிசமமாக அமையும். விருந்துகளில் கலந்து கொள்வார்கள்.

ரிஷபம்: மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திட்டம்போட்டு செயல்படுவீர். வியத்தகு வளர்ச்சி உண்டாகும். பணியாளர்க்கு உதவி செய்வீர்கள்.

மிதுனம்: கலங்கமற்ற மனமுடையவர். தாராளமாக பணம் வரும் சேமிக்க தொடங்கலாம். பொருப்புக்கள் உணர்ந்து செயல்படுவீர்.

கடகம்: வியாபாரத்தில் இருந்த குளறுபடிகளை கலையெடுப்பீர். உங்களை யாரும் ஏமாற்ற முடியாது. குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.

சிம்மம்: திட்டமிட்டபடி பயணம் அமைந்தாலும் சூழ்நிலைக்கு தகுந்தவாறு சிறு மாற்றம் செய்யலாம் நன்மை. தொழில் விருத்திக்கு அதிக நேரம் உழைப்பீர்கள்.

கன்னி: உயர்ந்த செயல்களால் தீடிர் பூகழ் பெறுவீர்கள். பெண்களுக்கு பொன் பொருள் சேரும். குடும்பத்தினர் மகிழ்ச்சியில் குதூகலம் அடைவார்கள்.

துலாம்: இளைஞர்களுக்கு சூப்பர் வேலை கிடைக்கும். நேற்று வரை சிறிவராக இருந்தவர் சம்பதிப்பதால் இன்று முதல் குடும்ப தலைவராக மாறுவார்கள்.

விருச்சிகம்: பயன் அறிந்து பேசுங்கள். தொழில் ரிதியாக புதிய ஒப்பந்தம் கையொழுத்தாகும். வருமானம் முன்னேற்றம் உருவாகும்.

தனுசு: புதிய செயல் திட்டம் உருவாகும். பணத்தை விதைத்து பல மடங்காக அறுவடை செய்வீர்கள். விரும்பிய வாழ்க்கை ஆரம்பமாகும்.

மகரம்: சமைக்கலாம் நன்றாக சாப்பிடலாம் உணவிலும் ஆனந்தம் உள்ளது தானே. வராமல் இருந்த பணம் இன்று வந்து சேரும்.

கும்பம்: வெளிவட்டார தொடர்புகள் எதிர்பாராமல் தொந்தரவு தரும். இன்று காலை11.48 மணி வரை சந்திராஷ்டமம். மதியத்திற்கு பிறகு சுமுகமாக தீரும்.

மீனம்: நணபரை எதிரியாக மாறுவார்கள். இன்று காலை 11.48 மணி முதல் சந்திராஷ்டமம். ஸ்ரீ பகவதியம்மனை தரிசனம் செய்யுங்கள்.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles