.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 13.9.2017


13.9.2017 புதன்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஆவணி மாதம் 28ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) அஷ்டமி திதி இரவு 11.38 மணி வரை பின் நவமி திதி.
ரோஹிணி நட்சத்திரம் காலை 8.05 மணி வரை பின் கார்த்திகை நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை.
எமகண்டம்- காலை 7.30 முதல் 9 மணி வரை.
நல்ல நேரம் காலை 6 முதல் 7 மணி வரை.
சூலம்- வடக்கு
ஸ்ரீகிருஷ்ணா ஜெயந்தி
கரிநாள்

13.9.2017 ராசி பலன்கள்

மேஷம்: உறவினர்கள் பாராட்டுவார்கள். குடும்பம் விஷயங்களில் அதிக அக்கரை காட்டுவீர்கள். வீடு மாற்றம் அமையும்.

ரிஷபம்: பொறுப்பு கூடும். கிடைத்த வேலையைச் சிறப்பாக முடிப்பார்கள். பெண்கள் அன்பு கிட்டும்.

மிதுனம்: கணக்கு பார்த்து செலவு செய்யுங்கள். விட்டால் வராது. பெண்களுக்குச் சினிமா வாய்ப்பு அமையும்.

கடகம்: நம்பிக்கையே வாழ்க்கை. வெற்றி தோல்வி வீரனுக்கு அழகு. எதிர்பாராமல் நன்மை கிடைக்கும்.

சிம்மம்: சூரியன் போல பிரகாசிப்பீர்கள். தேக பலம் கிட்டும். போட்டிகளில் ஜெயிப்பீர்.

கன்னி: நினைத்ததை அடையலாம். தர்மம் செய்வீர்கள். அரசியல்வாதிகளுக்குத் தலைவர் பதவி கிடைக்கும்.

துலாம்: இன்று இரவு 7.15 மணி வரை சந்திராஷ்டமம். மாலைக்கு பின் சிறப்பாகப் பனிகள் நடக்கும்.

விருச்சிகம்: காலையில் கடமைகள் சிறப்பாக நிறைவேறும். இரவு 7.15 மணிக்கு மேல் சந்திராஷ்டமம். ஸ்ரீ கற்பக விநாயகரைத் தரிசியுங்கள்.

தனுசு: காலையில் குழப்பத்தோடு எழுந்தாலும் இன்று பல வெற்றி மகிழ்ச்சி சிறப்பு கிட்டும் நாள் என்ன மகிழ்ச்சிதானே.

மகரம்: மாற்றம் அமையும் ஏற்றுக்கொள்ளுங்கள். திறமைகளைப் பயன்படுத்துங்கள். நன்மை நடக்கும்.

கும்பம்: இடம் பார்க்கலாம். வீடு கட்டும் முயற்சி ஆரமிக்கலாம். கல்யாண பேச்சுவார்த்தை நடக்கும்.

மீனம்: பகலில் எடுத்த முயற்சி இரவில் கைகொடுக்கும். இளைஞர்கள் புதிய தொழில் ஆரம்பிக்கலாம். புதிய உறவால் நன்மை.

நாளைச் சந்திப்போம்.

– ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Call- 9842521669. 9244621669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles