.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 15.4.2018


15.4.2018 ஞாயிற்றுக்கிழமை பஞ்சாங்கம்.

1193ம் ஆண்டு விளம்பி வருஷம் சித்திரை மாதம் 2ம்தேதி .
கிருஷ்ணப்பட்சத்து தேய்பிறை சதுர்த்தசி திதி காலை 8.34 மணி வரை பின் நிறைந்த அம்மாவாசை.
ரேவதி நட்சத்திரம் பின்னிரவு 4.23 மணி வரை பின் அஸ்வினி நட்சத்திரம்.
அமிர்த யோகம் பின்னிரவு 4.23 மணி வரை பின் சித்த யோகம்.
ராகுகாலம்- மாலை 4.30 முதல் 6 மணி வரை.
எமகண்டம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை 8 முதல் 9 மணி வரை. காலை 11 முதல் 12 மணி வரை. மாலை 6 முதல் 7 மணி வரை. இரவு 8 முதல் 9 மணி வரை.
சூலம்-மேற்கு.
ஜீவன்-0; நேத்திரம்-0;
அம்மாவசை.
இராமேஸ்வரம் ஸ்ரீ ராமநாத சுவாமி தரிசனம் செய்யுங்கள்

15.4.2018 ஞாயிற்றுகிழமை ராசிபலன்.
மேஷம்: குழந்தைகள் ஆசைகள் நிறைவேறும். எதிர்காலம் சிறக்க சில முன்னேற்பாடுகள் செய்வார்கள். சேமிப்பு அதிகரிக்கும்.
ரிஷபம்: முயன்றால் முடியாதது என்று உண்டோ. ஒர் கை பார்த்து விடுவோம். வெளிநாட்டில் வேலை கிடைக்கும்.
மிதுனம்; நாம் செய்த நல்ல செயலுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும். அரசியலில் சேரும் ஆர்வம் தோன்றும். நல்ல வாய்ப்பு வந்து தேடி வரும்.
கடகம்: சூப்பர் பவர். உடல் நலனில் புத்துணர்ச்சி உருவாகும். அன்றாட வேலைகளை சிறப்பாக பார்ப்போம். பலருக்கும் உதவுவார்கள்.
சிம்மம்: நல்ல காரியத்திற்காக காலையில் கிளம்புவோம். எதிர்பாராமல் சில தடைகள் தோன்றும். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். இராமேஸ்வரம் ஸ்ரீ ராமநாத சுவாமி தரிசனம் செய்யுங்கள்.
கன்னி: மனைவியின் பெயரில் புதிய இல்லம் பதிவு செய்வீர்கள். கனவு பலிக்கும். இன்று இரவு நல்ல செய்தி வரும்.
துலாம்: தடைபட்ட செயலை மறுபடியும் தொடங்கலாம் முழுவதும் சிறப்பாக முடிக்கலாம். மாணவர்கள் போட்டிகளில் வெல்வார்கள். ஆசிரியர் பாராட்டுக்கள் கிடைக்கும்.
விருச்சிகம்: தோல்வியடைந்த பாடங்களை மறுபடியும் எழுதி மாணவர் மாணவிகள் தேர்ச்சி பெறுவீர்கள். கல்லூரி படிப்பை முடித்து அசைப்பட்ட வேலை கிடைக்கும்.
தனுசு: திடமான நம்பிக்கை தொழில் போட்டிகளை திறம்பட சமாளித்து லாபம் விருத்தி செய்யலாம். தொழிலில் இல்லத்தரசி பங்களிப்பு தொடரும்.
மகரம்: உங்களை அவமானப்படுத்திவர்களை விடமாட்டோம். அவர்கள் ஒரு படி வளர்ச்சியடைந்து காட்டுவோம். அரசியல் செல்வாக்கு உயரும்.
கும்பம்: இட்ட பணியை செவ்வேன செய்வோம். தொலைக்காட்சி நாடகத்தில் நடிக்க வாய்ப்பு தேடிவரும். மனமகிழ்வோம்.
மீனம்: மஹா லெட்சுமி யோகம் கூடிவிட்டது. நல்ல சம்பாதிக்கும் மனைவி அமையும். வாழ்க்கை இனிக்கும்.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles