.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 16.10.2017


16.10.2017 திங்கட்கிழமை பஞ்சாங்கம்.

1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் புரட்டாசி மாதம் 30ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) துவாதசி திதி பின்னிரவு 1.23 மணி வரை பின் திரயோதசி திதி.
மகம் நட்சத்திரம் காலை 8.01 மணி வரை பின் பூரம் நட்சத்திரம்.
மரண யோகம் காலை 8.01 மணி வரை பின் சித்த யோகம்.
ராகுகாலம்- காலை 7.30 மணி முதல் 9 மணி வரை.
எமகண்டம்- காலை 10.30 முதல் 12 மணி வரை.
நல்லநேரம்- காலை 9 முதல் 10.30 மணி வரை. மதியம் 3 முதல் 4 மணி வரை. இரவு 6 முதல் 8 மணி வரை.
சூலம்- கிழக்கு.
ஜீவன்- 1/2; நேத்திரம்- 1;
ஸ்ரீ அருணந்தி சிவாச்சாரியார் குருபூஜை.

16.10.2017 திங்கட்கிழமை ராசிபலன்.

மேஷம்: தெய்வ தரிசனம் உண்டு. பெரியோர்கள் நண்பர்கள் உறவினர்கள் ஆசி கிடைக்கும். சொத்துக்கள் வாங்கலாம். குழந்தை பாக்கியம் கிட்டும்.

ரிஷபம்: இடம் வாங்கலாம் வங்கி கடன் கிடைக்கும். வீடு கட்டலாம். பழைய இடத்தை விற்கலாம். பிரயாணம் சுகம் உண்டு.

மிதுனம்: புத்துணர்ச்சி பெறுவீர்கள். யோகா தியானம் மூலம் ஆத்மா பலம் பெருகும். காரியம் வெற்றி பெறும்.

கடகம்: உங்கள் கட்டளைக்கு குடும்பம் அடிபணிந்து நடக்கும். பணத்திற்குப் பஞ்சம் இல்லை. புகழ் அந்தஸ்து கிடைக்கும்.

சிம்மம்: இயற்கையை ரசிப்பார்கள். ரம்மியமான அசைகள் துளிர்விடும். பார்ட்டி விருந்து என அமர்களப்படும். ஆனந்தமான நாள்.

கன்னி: விருந்துக்கு உறவுகள் நண்பர்கள் பட்டாளம் வரும். செலவு தருமாறாகும். தீடிர் வெளிநாட்டில் வேலைக் கிடைக்கும். சாதுக்கள் ஆசி கிட்டும்.

துலாம்: வெகு நாட்களாக வராமல் இருந்த பணம் இன்று வந்து சேரும். இதனால் நாம் பட்ட கடன்களை அடைத்துவிடலாம். நிம்மதி தரும் நாள்.

விருச்சிகம்: வில்லங்கம் முறியடிப்போம். போட்டிகளை சமாளிப்போம். தொழில் விருத்தி அமையும். லாபம் கூடும்.

தனுசு: இளைஞர்கள் பெண்களுக்கு எதிர்பார்த்த நல்ல வேலைக் கிடைக்கும். இதனால் பொருளாதார ஏற்றம் உண்டாகும். திருமணமும் கூடிவரும்.

மகரம்: மனக்குழப்பத்தில் தவிப்பீர்கள். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ துர்க்கை அஷ்டோத்திரம் பாராயணம் செய்யுங்கள்.

கும்பம்: திருமணம் பேசுங்கள் சுமுகமாக முடியும். எதிர்கால துணைவியோடு கைப்பேசியில் உரையாடலாம். குழந்தை பாக்கியம் கிட்டும்.

மீனம்: துஷ்டனைக் கண்டால் தூரவிலகு. வழக்குகள் இழுத்தடிக்கும். எல்லாம் நன்மைக்கே. கடன் முயற்சி பலிதமாகும்.

நாளைச் சந்திப்போம்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles