.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 18.10.2017


18.10.2017 புதன்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஐப்பசி மாதம் 1ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) சதுர்த்தசி திதி இரவு 12.26 மணி வரை பின் நிறைந்த அமாவாசை.
உத்திரம் நட்சத்திரம் காலை 7.44 மணி வரை பின் ஹஸ்தம் நட்சத்திரம்.
அமிர்த யோகம் காலை 7.44 மணி வரை பின் மரண யோகம்.
ராகுகாலம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை.
எமகண்டம்- காலை 7.30 முதல் 9 மணி வரை.
நல்லநேரம்- அதிகாலை 4 முதல் 7.20 மணி வரை. (தீபாவளி சாமி தரிசனம் செய்து புத்தாடை உடுத்த எற்ற நேரம்)
Daily Cinemas வாசகர்கள் அனைவருக்கும் தீபாவளி பண்டிகை நல்வாழ்த்துக்கள்.

18.10.2017 புதன்கிழமை ராசிபலன்.

மேஷம்; செயல் ஆற்றல் மிகுந்த தீபாவளி. எதிர்பாராமல் திடிர் வேலை பணிகளும் அமையும். கடமை உணர்ந்து செயல்படுவீர்.

ரிஷபம்; தீபம் எற்றி குடும்பத்தினருடன் சிறப்பு வழிபாடுகள் செய்து தீபாவளி கொண்டாட்டம் சிறக்கும். ஆலய தரிசனம் மகிழ்ச்சி.

மிதுனம்: உற்றார் உறவுகள் சேர்த்து கலைக்கட்டும் தீபாவளி. ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் பரிமாற்றம் செய்து மகிழலாம்.

கடகம்: உணர்ச்சி மிக்க பகைமை விலகி மீண்டும் நட்பை புதுப்பிக்கும் தீபாவளி. சிறப்பான பல முயற்சிகள் செய்யுங்கள்.

சிம்மம்: கலகலப்பான குடும்பத்தினருடன் கலாட்டா விளையாட்டு என சந்தோஷம் அடையும் தீபாவளி. நண்பர்களுக்கு வீடியோ காலில் வாழ்த்துக்கள் சொல்வோம்.

கன்னி: இயற்கை கொஞ்சும் பிரதேசங்களுக்குச் சுற்றுலா சென்று தீபாவளி கொண்டாட்டம் சிறக்கும். மனம் ஜாலியான சூல்நிலையை உருவாக்கும்.

துலாம்: வெகு நாட்களாக வராமல் இருந்த பணம் இன்று வந்து சேரும். இதனால் நாம் பட்ட கடன்களை அடைத்துவிடலாம். நிம்மதி தரும் நாள்.

விருச்சிகம்: துள்ளல் தீபாவளி. கிப்ட் ஸ்விட் கிப்ட் பாக்ஸ் வெடிகள் நிறைய வந்து சேரும். பெண்கள் ஆசை தீர வெடி வெடிப்பார்கள்.

தனுசு: குடும்பத்தினர் மகிழ்ச்சி. உங்கள் தொழிற்சாலையில் வேலை பார்ப்பவர்களுக்கு கிப்ட் கொடுத்து மகிழ்விக்கும் தீபாவளி.

மகரம்: சிலருக்கு சிலிர்க்கும் தலை தீபாவளி. சிலருக்கு தீபாவளி வாழ்த்துக்கள் சொல்லி திருமணம் பேச்சுவார்த்தைக்கு பிள்ளையார் சூலி போடுவார்கள்.

கும்பம்: உறவுகள் நண்பர்கள் விருந்துக்கு வரும் தீபாவளி. இன்று முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளதால் வெடி வெடிக்கும் போது கவனம். ஸ்ரீ சுப்பிரமணியரை வழிபாடு செய்யுங்கள்.

மீனம்: தீபாவளி மகிழ்ச்சியுடன் கொண்டாட்டம். புதிய திரைப்படத்திற்கு டிக்கெட் கிடைக்கும். முதல் காட்சி பார்க்கலாம்.

இனிய தீபாவளி பண்டிகை நல்வாழ்த்துக்கள்.

நாளைச் சந்திப்போம்.

– ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Call – 9842521669. 9244621669

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles