.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 19.11.2017


19.11.2017 ஞாயிற்றுக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் கார்த்திகை மாதம் 3ம்தேதி.
சுக்லப்பட்சத்து (வளர்பிறை) பிரதமை திதி இரவு 6.59 மணி வரை பின் துதியை திதி.
அனுஷம் நட்சத்திரம் இரவு 10.17 மணி வரை பின் கோட்டை நட்சத்திரம்.
இன்று முழுவதும் மரண யோகம்.
ராகுகாலம்- மாலை 4.30 முதல் 6 மணி வரை.
எமகண்டம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை.
நல்லநேரம்- இல்லை.
சூலம்- மேற்கு.
ஜீவன்- 0: நேத்திரம்- 0;
ஸ்ரீ கோடி கன்னிகாதானம் தாதாச்சாரியார் குருபூஜை.

19.11.2017 ஞாயிற்றுக்கிழமை ராசிபலன்.

மேஷம்; ஆலய தரிசனம் கோடி நண்மை. எந்த காரியத்திலும் ஈடுபாடவேண்டாம். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ கந்தசஷ்டி கவசம் படியுங்கள்.

ரிஷபம்: கனவன் மனைவி அன்புடன் பல நல்ல காரியங்களை சிறப்பாக செய்வீர்கள். வெகு நாட்களாக வராமல் இருந்த உறவினர் வருகை இன்ப அதிர்ச்சியை கொடுக்கும்.

மிதுனம்: இதுவரை இருந்த பக்கத்து வீட்டினர் முட்டல் மோதல்கள் தீர்ந்து ஒற்றுமை உருவாகும். கொடுக்கல் வாங்குதல் சிறப்பாக நடக்கும்.

கடகம்; கடந்து வந்த பாதை முட்கள் நிறைந்து அனுபவம் பல. இன்று அந்த அனுபவம் மலர்களை போல் பயன்படும்.

சிம்மம்: சினிமாவுக்கு கூட்டாளிகள் சேர்த்து போய் மகழ்வீர்கள். இடம் வாங்கலாம் வங்கி லோன் வாங்கி வீடு கட்டலாம். பண பரிவர்த்தனை சிறப்பாக நடக்கும்.

கன்னி: உங்கள் திறமைகளை கண்டு நீங்களை பூரிப்படைவீர்கள். வெகுமதி கிடைக்கும். பாராட்டு மழையில் நினைவீர்கள்.

துலாம்: துரதேசம் பயணம் அதிர்ஷ்ட வசமாக அமையும். அமைத்த வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்தி கொள்வார்கள். கல்யாணம் கலைவந்து விட்டது.

விருச்சிகம்: விட்ட இடத்தை பிடிப்போம். உங்களை ஏளனமாக நினைத்தவர்கள். உங்கள் பரிணாம வளர்ச்சி அவர்களை பொறாமை அடைய செய்யும். கண்திருஷ்டி சுற்றி போடுங்கள்.

தனுசு: தந்தையின் தொழிலை நவீன முறைப்படி மாற்றம் செய்யுங்கள் நல்ல சம்பாதிக்கலாம். சமூக உதவி கிடைக்கும்.

மகரம்; பயத்துடன் ஆரமித்த தொழில் விருட்சம் போல் வளரும். உறவுகள் நண்பர்களுக்கு வேலை கொடுக்கலாம். பலர் உயர்வடைவார்கள்.

கும்பம்: வெற்றி ஒன்றை இலக்காக கொண்டு செயல்படுவீர். குறிக்கோளை அடைவார்கள். கல்வி ஆர்வம் அதிகரிக்கும்.

மீனம்: எல்லா நிறைவாக கிடைக்கும். நாமும் வாழ்வோம் அடுத்தவர்களையும் வளவைப்போம். சேவை செய்யுங்கள்.

நாளை சந்திப்போம்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles