.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 19.9.2017


19.9.2017 செவ்வாய் கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் புரட்டாசி மாதம் 3ம்தேதி.
கிருஷ்ணபட்சத்து சதுர்த்தசி திதி மதியம் 12.07 மணி வரை பின் நிறைந்த அமாவாசை.
பூரம் நட்சத்திரம் இரவு 12.02 மணி வரை பின் உத்திரம் நட்சத்திரம்.
சித்த யோகம் இரவு 12.02 மணி வரை பின் அமிர்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை.
எமகண்டம்- 7.30 முதல் 9 மணி வரை.
நல்ல நேரம்- காலை காலை 11 முதல் 12 மணி வரை. இரவு 7 முதல் 8 மணி வரை.
ஸர்வ பித்ரு திதி.
மஹாளாய அமாவாசை.
யமதர்ப்பணம்.
ஜீவன்-0.; நேந்திரம்-0.;
சூலம்- வடக்கு.

19.9.2017 செவ்வாய்க்கிழமை ராசிபலன்கள்.

மேஷம்: உங்களுக்குக் காலம் வந்துவிட்டது. உழைப்பால் உயர்வு கிடைக்கும். தெய்வீக அருளால் பணம் வந்து சேரும்.

ரிஷபம்: ஜாலியான நாள். ஊர் சுற்றலாம். மனதிற்குப் பிடித்த பொருள் வாங்கலாம். உறவுகள் மலரும்.

மிதுனம்: மின்னல் போல் செயல் இருக்கும். இடி போல் கோபம் வரும். உங்களைப் பார்த்து மற்றவர்கள் பயப்படுவார்கள்.

கடகம்: அழகிய குடும்பம். குடும்பத்தினருடன் குதுகலித்து மகிழலாம். இன்ப சுற்றுலா செல்லலாம். தனம் சேரும்.

சிம்மம்: மனம் போன போக்கில் பயணம் அமையும். இன்பமான நாள். பெண்கள் ஆசைகள் நிறைவேறும். காதல் அனுகூலமாகும்.

கன்னி: தண்ணீராக செலவழிப்பீர்கள். கொஞ்சம் சிக்கனம் தேவை. புதிய பிரயாணம் உருவாகும்.

துலாம்: வருமானம் வரும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருள்கள் வாங்கி மகிழலாம். மறுத்திருமண யோகம் கிட்டும்.

விருச்சிகம்: திறமைக்கு மரியாதை கிடைக்கும். பதவி உயர்வு உண்டு. சம்பளம் கூடிவிட்டது. இடம் வாங்கலாம்.

தனுசு: விட்ட இடத்தைப் பிடித்து விடுவோம். அந்தஸ்து கிடைக்கும். நல்லவர்களிடம் பழகுவோம். .

மகரம்: இன்று முழுவதும் சந்திராஷ்டமம். கஷ்டங்கள் நீங்க ராகுகாலத்தில் ஸ்ரீ துர்க்கை வழிப்படுங்கள். பணம் யாருக்கும் கொடுக்க வேண்டாம்.

கும்பம்: குழப்பங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள். மனைவியின் அன்பு பாசம் கிட்டும். உறவுகள் உதவும். மாற்றம் உருவாகும்.

மீனம்: கடன் முயற்சி பலனளிக்கும். விரக்தி தோன்றும். பல உண்மைகள் வெளிவரும்.

நாளைச் சந்திப்போம்.

– ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Call – 9842521669. 9244621669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles