.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 2.01.2018


2.1.2018 செவ்வாய் கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மார்கழி மாதம் 17ம்தேதி.
சுக்லப்பட்சத்து (வளர்பிறை) பௌர்ணமி திதி காலை 8.33 மணி வரை பின் கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) பிரதமை திதி.
திருவாதிரை நட்சத்திரம் மதியம் 12.56 மணி வரை பின் புனர்பூசம் நட்சத்திரம்.
மரண யோகம் மதியம் 12.56 மணி வரை பின் சித்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை.
எமகண்டம்- காலை 9 முதல் 10.30 மணி வரை.
நல்லநேரம்- இரவு 7 முதல் 9 மணி வரை.
சூலம்- வடக்கு.
ஜீவன்- 1; நேத்திரம்- 2;
ஆருத்ரா தரிசனம்.
ஸ்ரீசடைய நாயனார் குருபூஜை.

2.1.2017 செவ்வாய் கிழமை ராசிபலன்.

மேஷம்: இன்று புதிய திருப்பம் உருவாகும். மலர்ந்த புத்தாண்டு மறுமலர்ச்சி உத்வேகம் பிறக்கும். நல்லவர்களை சந்திப்போம்.

ரிஷபம்: தொழில் விஷயமாக வெளியூர் சென்ற இடமெல்லாம் உங்களுக்கு சிறப்பு. எதிர்பாராமல் பல திருப்புமுனை உருவாகும். பணம் வரும்.

மிதுனம்: பழைய ஞாபகம் வருகிறது. இளமை காலத்தில் பழகியவர்களை சந்திப்போம் உரையாடுவோம். மனம் துள்ளும்.

கடகம்: இளம் பெண்களுக்கு கல்யாண கலை வந்து விட்டது. பெற்றோர்கள் அழகு அந்தஸ்துயுடைய மாப்பிள்ளை பார்த்து விட்டார்கள். இனி கெட்டி மேளம் கொட்டும்.

சிம்மம்; அரசியல் ஆர்வம் அதிகரிக்கும். முக்கிய அரசியல் கட்சியில் சேர்வீர்கள். பல சேவைகள் செய்வீர்கள் புகழ் கிட்டும்.

கன்னி; பணியில் இருந்த குறிக்கிடுகள் விலகும் குறித்த நேரத்தில் காரியத்தை முடிப்பார்கள். உறவுகள் கைக்கொடுக்கும்.

துலாம்: அரசியல் கட்சி தலைவர்களை சந்திப்போம். இளைஞர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். வருமானம் உயரும்.

விருச்சிகம்: போன மாச்சான் திரும்பி வந்தான் என ஏளனமாக பேசுவார்கள் இன்று முழுவதும் சந்திராஷ்டமம் ஸ்ரீ துர்க்கை வழிபாடு செய்யுங்கள்.

தனுசு: பல நண்பர்களை தேடி சென்று சந்தித்து கூட்டாக சேர்த்து தொழில் ஆரம்பிக்க முயற்சி செய்வோம். கூட்டு முயற்சி வெற்றியடையும்.

மகரம்: வெளிநாட்டில் தங்கியிருந்து வேலை தேடுவோம். நல்லோரின் உதவியால் பணி கிடைக்கும். சினிமா சான்ஸ் அமையும்.

கும்பம்: முக்கிய நிகழ்ச்சிக்கு நேரம் தவறி செல்வோம் எனினும் உங்களுக்காக பலர் காத்திருப்பார்கள். மரியாதை கொடுப்பார்கள்.

மீனம்: திறமை உங்களை உயர்ததும் சம்பளம் உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வெளிநாட்டுபயணம் உருவாகும்.

நாளை சந்திப்போம்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles