.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 20.10.2017


20.10.2017. வெள்ளிக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஐப்பசி மாதம் 3ம்தேதி.
சுக்லப்பட்சத்து ( வளர்பிறை) பிரதமை திதி இரவு 1.30 மணி வரைப் பின் துதியைத் திதி.
சித்திரை காலை 9.22 மணி வரைப் பின் சுவாதி நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- பகல் 10.30 முதல் 12 மணி வரை.
எமகண்டம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை.
நல்லநேரம் – இன்று முழுவதும் பிரதை திதி இருப்பதால் காரியம் தொடங்க நல்லநேரம் குறிக்கவில்லை.
சூலம்- மேற்கு.
ஜீவன்-0; நேத்திரம்- 0;
திரு மெய்கண்டார் நாயனார் குருபூஜை.
திருச்செந்தூரில் ஆறு நாள் சஷ்டி விரதம் இன்று முதல் நாள் ஆரம்பம்.

20.10.2017 வெள்ளிக்கிழமை இன்றைய ராசிபலன் கந்த சஷ்டி ஆரம்பம் முதல் நாள் சிறப்பு.

மேஷம்: இன்று முதல் சஷ்டி விரதம் ஆரம்பியுங்கள். அழகிய குழந்தை பாக்கியம் கிட்டும். மனைவியின் பரிபூரண அன்பு கிடைக்கும்.

ரிஷபம்: இன்று முதல் 6 நாட்கள் ஸ்ரீசுப்பிரமணியரை தரிசனம் செய்யுங்கள். வழக்கு வெற்றி தீர்ப்பு வரும். எல்லாப் பிரச்சனைகளும் தூள்தூளாகும்.

மிதுனம்: சுவாமி மலை திருமுருகனை தரிசித்தால் பிள்ளைகளுக்கு சிறந்த ஞானம் கல்வி அறிவு கிடைக்கும். திறமைகள் பளிச்சிடும்.

கடகம்: 6 நாட்கள் கடம்பனை வணங்கினால் இடம் வாங்கி வீடு கட்டலாம். உங்கள் வீட்டை வாஸ்து படி யோகம் நிறைந்த இல்லமாக மற்றலாம்.

சிம்மம்: மருதமலை சென்று வாருங்கள் ஓர் அற்புதம் நடக்கும் பாருங்கள். மனதில் எண்ணிய எண்ணம் எல்லாம் நிறைவேறும்.

கன்னி: பெண்களுக்குத் திருமணம் முயற்சி கைகூடவில்லையா? உடனே திருப்பரங்குன்றம் ஸ்ரீதெய்வசேனை சமே ஸ்ரீசுப்பிரமணியரை தியானித்து 6 நாள் விரதமிருந்து வாருங்கள்.

துலாம்: விசாகத்தோனை நோக்கி 6 நாள் விரதமிருந்தால் நினைத்த காரியம் நிறைவேறும். மனபயம் நீங்கும். கடன் அடையும்.

விருச்சிகம்: வீட்டில் வெள்ளி வேல் வைத்து 6 நாள் முருகன் அஷ்டோத்திரம் படித்தால் எதிர்ப்பு விலகும். அரசு வேலைப் பிரச்சினையால் சஸ்பெண்ட் வழக்கு வெற்றி தீர்ப்பு வரும். மீண்டும்
வேலைக்குப் போகலாம்.

தனுசு: தலைமுறை தோஷம் நீங்க 6 நாள் தொடர்ந்து தினமும் 3 முறை கந்த சஷ்டி கவசம் படியுங்கள். வாழ்க்கையில் நம்பிக்கை பிறக்கும்.

மகரம்: திருச்செந்தூர் திருமுருகனை நினைத்து இன்று முதல் 6 நாட்கள் அனைய தீபம் ஏற்றுங்கள். திருமணம் யோகம் கூடிவிடும். புத்திர பாக்கியம் கிட்டும்.

கும்பம்: பழனி திருமுருகனை நினைத்து 6 நாள் கந்த குரு கவசம் படியுங்கள் குடும்ப கஷ்டங்கள் அனைத்தும் விலகும். கடன் நிவர்த்தியாகும்.

மீனம்: திறமை இருந்தும் மரியாதை குறையும் இன்று முழுவதும் சந்திராஷ்டமம். கந்தசஷ்டி கவசம் படியுங்கள்.

நாளைச் சந்திப்போம்.

– ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Call – 9842521669. 9244621669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles