.
.

.

Latest Update

2018 புத்தாண்டு பலன்கள்


2018 கன்னி லக்கனத்தில் மிருகசீரிடம் நட்சத்திரம் ரிஷபம் ராசியில் பிறக்கிறது. உலகில் பல மாற்றங்கள் நிகழும். கல்வித்துறையில் புதிய மாற்றம் சந்திக்கும். ஆசிரியர்கள் தகுதியை உயர்த்த சிறப்பு படிப்புகள் அமையும். இந்தியர்கள் உலகளவில் வேலை வாணிகம் செய்வார்கள். இன்னும் பல புதிய டெக்னாலஜிகள் உருவாகும். பல நாடுகள் அரசியலில் அதிரடி மாற்றம் நிகழும். இந்திய அரசியலில் மத்திய அமைச்சர்கள் மேல் பல குற்றசாட்டுகள் பதிவாகும். தமிழகத்தில் பொது தேர்தல் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும். திமுக வெற்றி வாய்ப்பு பிரகாசம். தினகரன் அசைக்க முடியாத சக்தியாக உருவொடுப்பார். சிறிய கட்சிகள் பல காணாமல் போகும். முதுபெரும் தலைவரை இந்தியா இழக்கும். தமிழக தலைவர்கள் மீண்டும் இந்தியா அளவில் தவிர்க்க முடியாத சக்தியாக அமைவார்கள். இந்த ஆண்டு மிருகசீரிடம் நட்சத்திரம் செவ்வாய் பகவானின் நட்சத்திரம் பஸ் இரயில் விமான கப்பல் போக்குவரத்து விரிவடையும். சாலைகள் மேம்படும். தொழிற்சாலைகள் பெருகும். இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் சிறப்பான வேலை அமையும். இந்து ஆன்மீக துறையில் சிறப்பான தலைமை தோன்றும் ஆன்மீக சித்தாந்தம் வளரும். புதிய அணைகள் கட்டப்படும். விவசாய வளர்ச்சி பெறும். கலைத்துறையினர் பலர் அரசியலுக்கு வருவார்கள். சோபிக்க முடியாது. அரசியலில் பொருளாதாரத்தில் மாற்றம். நல்ல மழை பெய்யும் 2018.

புத்தாண்டு பலன்கள்.
மேஷம்: சுபிட்சம் மிகுந்த ஆண்டு. குரு பலம் வியாழ நோக்கம் அக்டோபர் வரை உள்ளது. நல்ல வரன் கிடைக்கும். ஆடம்பரமாக திருமணம் நடக்கும். தேனிலவு சுற்றுலா செல்லலாம். கணவன் மனைவி அன்பு தித்திக்கும். குழந்தைகள் நன்றாக படிப்பார்கள். சூப்பர் மதிப்பெண் கிட்டும். உயர்படிப்பு வாய்ப்பு அமையும். படித்த இளைஞர்களுக்கு வெளிநாட்டில் வேலை கைநிறைய சம்பளம் வாழ்க்கை தரம் உயரும். அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவார்கள். மருத்துவம் இன்ஞினியரிங் துறையினர் சாதனை படைப்பார்கள். பெண்களின் கனவு ஆசைகள் நிறைவேறும். விலையுயர்ந்த ஆடைகள் தங்கம் வைரம் வெள்ளி நகைகள் வாங்கி சேர்க்கலாம். 2018 ம் ஆண்டு நவக்கிரகங்கள் சிறப்பான இடங்களில் அமர்ந்து உள்ளதால் எல்லா வளங்களும் நிறைவாக அமையும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அதிர்ஷ்ட எண்கள்- 3, 9,
அதிர்ஷ்ட நிறங்கள் – மஞ்சள், சிவப்பு.
சிறப்பு வழிபாடு- பிள்ளையார்பட்டி ஸ்ரீகறபக விநாயகர் தரிசனம் செய்யுங்கள்

புத்தாண்டு பலன்கள்.
ரிஷபம்: 2018 மாற்றங்கள் நிறைந்த வருஷம். வங்கி லோன் கிடைக்கும். இடம் வாங்கலாம் வீடு கட்டலாம். பழைய விட்டை விற்கலாம். வெளிநாட்டில் தொடர்ந்து குடியிருக்க விசா கிடைக்கும். முயன்றால் எல்லா முயற்சிகளும் வெற்றி கிடைக்கும். உறவுகள் வழி பகை விலகும். வழக்கு வெற்றி பெறும். தொழில் முன்னேற்றம் உருவாகும். விவசாயிகளுக்கு வளம் வருமானம் உயரும். 2018 பல சங்கடங்கள் அகற்றும் ஆண்டு. புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அதிர்ஷ்ட எண்கள்- 2, 6,
அதிர்ஷ்ட நிறங்கள்- வெண்மை. ஆரஞ்சு,
சிறப்பு வழிபாடு- 2018 தினமும் ஸ்ரீதுர்கை அஷ்டோத்திரம் படியுங்கள்.

புத்தாண்டு பலன்கள்.
மிதுனம்: 2018ல் துணிச்சலுடன் அடியொடுத்து வையுங்கள். பல சாதனை படைக்க போகிறீர்கள். உறவுகளை பல படுத்துவோம். கடன்கள் முழுவதும் அடைத்து நிம்மதி கிடைக்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் இனிதே நடக்கும். குழந்தைகளுக்கு வித்யா சூப்பர். இளைஞர்களுக்கு திறமைக்கேற்ற வேலை கிடைக்கும். வருமானம் உயரும் வீடு கார் வாங்கலாம் வளம் சேர்க்கும் 2018 வாழ்த்துக்கள்.
அதிர்ஷ்ட எண்கள்- 1, 5,.
அதிர்ஷ்ட நிறங்கள்- ஆரஞ்சு, பச்சை,
சிறப்பு வழிபாடு- 2018 தினமும் ஸ்ரீ மஹா லெட்சுமி அஷ்டோத்திரம் படியுங்கள்.

புத்தாண்டு பலன்கள்.
கடகம்: 2018 சந்தோஷம் மிகுந்த வருஷம். எல்லா காரியமும் இனிதா நடக்கும். பழைய நட்புக்களை விட்டு புதிய நட்புகளை உருவாக்கி பல அனுகூலங்களை அடைவார்கள். மனைவி வழி சொத்துக்கள் உங்கள் பெயருக்கு பதிவாகும். வீடு மாற்றம் ஊர் மாற்றம் என பல மாற்றம் உருவாகும் எல்லாமே நன்மைக்கே. குழந்தை பாக்கியம் கிட்டும். தொழில் வளர்ச்சி பெறும். முதல்முதலாக வெளிநாட்டு பயணம் 2018ல் உருவாகும் வாழ்த்துக்கள்.
அதிர்ஷ்ட எண்கள்- 2, 9,
அதிர்ஷ்ட நிறங்கள்- வெண்மை, சிவப்பு,
சிறப்பு வழிபாடு: 2018 தினமும் சந்திர ஹோரையில் அம்பாள் அஷ்டோத்திரம் படியுங்கள்.

புத்தாண்டு பலன்கள்.
கன்னி; 2018 புதிய வாழ்க்கை ஆரம்பமாகும். தேனீலவு பயணம் சந்தோஷம் தம்பத்திய வாழ்க்கை இனிக்கும். எதிர்காலம் திட்டங்கள் தீட்டி செயல்படுவீர். கணவன் மனைவி இருவருக்கும் நல்ல சம்பளத்துடன் வேலை அமையும். ஆடம்பர பங்களா வாங்கலாம். உறவுகள் உங்கள் உதவியை நாடுவார்கள். பலருக்கும் உதவுவீர்கள். பெண்கள் ஆசைகள் நிறைவேறும் தங்க வைரம் வெள்ளி நகைகள் வாங்கி சேர்க்கலாம். வசதிகள் அதிகரிக்கும் 2018 வளமுடன் வாழுங்கள்.
அதிர்ஷ்ட எண்கள்- 5, 9,
அதிர்ஷ்ட நிறங்கள்- பச்சை, சிவப்பு.
சிறப்பு வழிபாடு- ஸ்ரீ கிருஷ்ணா அஷ்டோத்திரம் 2018 தினமும் படியுங்கள்.

புத்தாண்டு பலன்கள்.
சிம்மம்; 2018 சுபிட்சம் நிறைந்திருக்கும். குடும்ப பெரியோர்கள் பெற்றோர்கள் ஆன்மீக பெரியோர்கள் ஆசிர்வாதம் கிட்டும். கல்யாண பாக்கியம் கிட்டும். குலதெய்வ அருளால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பெண்களுக்கு வேலை நிறைந்த சம்பளம் எதிர்காலம் சிறப்பு. யாருக்கும் பொருளாதார உதவிகள் செய்ய வேண்டாம். பலகலைகள் கற்க்கலாம். பூர்வீகம் சொந்தங்கள் ஒன்றினையும் 2018 பாச பந்தம் நிறைந்த வருஷம்.
அதிர்ஷ்ட எண்கள்- 1, 3,
அதிர்ஷ்ட நிறங்கள்- ஆரஞ்சு, மஞ்சள்.
சிறப்பு வழிபாடு- 2018 தினமும் ஸ்ரீ சூரிய நமஸ்காரம் செய்யுங்கள்.

புத்தாண்டு பலன்கள்.
துலாம்: 2018 மரியாதை அந்தஸ்து புகழ் உயரும் வருஷம். அரசியல் பதவிகள் உங்களை தேடி வரும். எல்லோருக்கும் தலைவர் பதவி கிட்டும். கிடைத்த அந்தஸ்தை திறமையாக பயன்படுத்தி கொள்வார்கள். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். திறமையானவர்கள் தகுதி அறிந்து பயன்படுத்திவீர்.பெண் குழந்தைகள் சிறப்பாக படிப்பார்கள். இடம் வாங்கி வீடு கட்டலாம். தொழில் வளர்ச்சி பலமடங்கு உயரும். பலருக்கும் வேலை கொடுக்கலாம். எல்லோரையும் வாழ வைக்கும் 2018 வாழ்த்துக்கள்.
அதிர்ஷ்ட எண்கள்- 6, 8,
அதிர்ஷ்ட நிறங்கள்- நீலம், கருப்பு,
சிறப்பு வழிபாடு: ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் 2018 தினமும் படியுங்கள்.

புத்தாண்டு பலன்கள்.
தனுசு; 2018 பல அனுபவங்கள் கற்கும் கற்பிக்கும் வருஷம். மாணவர் மாணவிகள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவார்கள். உத்தியோஸ்தர்களுக்கு சம்பளம் உயரும். அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த இடம் மாற்றம் செய்யலாம். ஊர் மாறலாம். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். காதல் மலரும். வயதானவர்கள் உடல் நிலையில் கவனம் செலுத்துவோம். வெளிநாட்டிலிருந்து நிறைய சம்பாதித்து குடும்பத்தினர்க்கு அனுப்புவோம். உண்மையான நேசம் அன்பு கிட்டும் 2018 வாழ்த்துக்கள்.
அதிர்ஷ்ட எண்கள்- 3, 4.
அதிர்ஷ்ட நிறங்கள்- மஞ்சள், நீலம்.
சிறப்பு வழிபாடு: ஸ்ரீ ஆஞ்சநேயர் அஷ்டோத்திரம் 2018 தினமும் படியுங்கள்.

புத்தாண்டு பலன்கள்.
விருச்சிகம்: 2018 திறமைகள் பளிச்சிடும். வேலை தேடிய இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் தகுதிமிக்க வேலை உயர்த்த சம்பளம் என வாழ்க்கை தரம் சிறக்கும். போலிஸ் ரானுவத் துறை வேலை வாய்ப்பு கிடைக்கும். வேலை கிடைத்தால் அடுத்த நல்ல காரியம் திருமணம் அதுவும் சிறப்பு. இனிய வாழ்க்கை. பேச்சை குறைத்தால் எல்லாம் ஜெயம். உறவுகள் கொஞ்சம் நம்மை விட்டு ஒதுங்கும் கண்டுகொள்ள வோண்டாம். 2018 தனிமனித அந்தஸ்தை கொடுக்கும் வாழ்த்துக்கள்.
அதிர்ஷ்ட எண்கள்- 9, 6,
அதிர்ஷ்ட நிறங்கள்- சிவப்பு, சாம்பல நிறம்.
சிறப்பு வழிபாடு; 2018 தினமும் ஸ்ரீ கந்தசஷ்டி கவசம் படியுங்கள்.

புத்தாண்டு பலன்கள்.
மகரம்: 2018 ஆர்வம் சுறுசுறுப்பு அதிகரிக்கும் வருஷம். பல போராட்டங்களை சிறப்பாக எதிர்கொண்டு வெற்றி பெறும் காலம். கவலை வேண்டாம் கிடைத்த வாய்ப்பை திறமைகளை பயன்படுத்தி கொள்வார்கள். திறமையானவர்களுக்கு உயர்வு நல்ல வருமானமும் கிடைக்கும். உங்கள் இல்லத்தரசிக்கு நல்ல வேலை கிடைக்கும். குடும்பம் பொருளாதார ஏற்றம் உண்டாகும். குழந்தைகள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நண்பர்களை நம்ப வேண்டாம். வீடு கட்ட கார் வாஙக 2018ல் வங்கி லோன் கிடைக்கும் வாழ்த்துக்கள்.
அதிர்ஷ்ட எண்கள்- 4, 3.
அதிர்ஷ்ட நிறங்கள்- நீலம், மஞ்சள்.
சிறப்பு வழிபாடு: 2018 தினமும் ஸ்ரீவிநாயகர் அகவல் படியுங்கள்.

புத்தாண்டு பலன்கள்.
கும்பம்: 2018 சகல நன்மைகளும் நிறைந்த லாபம் கிடைக்கும் வருஷம். கலயாண நடக்கும் அழகிய குழந்தை பிறக்கும். இதுவரை வேலை பார்த்தவர்கள் சிறிய முதலிட்டில் தொழில் தொடங்கி நல்ல லாபம் பார்க்கலாம். இளைஞர்களுக்கு பதவி உயரும். பெண்களுக்கு நல்ல அந்தஸ்து உள்ள மாப்பிள்ளை அமையும். தங்க வைரம் நகைகள் வாங்கலாம். சொத்துக்கள் சேர்க்கலாம். இனிய வெளிநாட்டு சுற்றுலா செல்லும் 2018 வாழ்த்துக்கள்.
அதிர்ஷ்ட எண்கள்- 8, 1.
அதிர்ஷ்ட நிறங்கள்- நீலம், ஆரஞ்சு.
சிறப்பு வழிபாடு; 2018 தினமும் ஸ்ரீ அபிராமி அந்தாதி படியுங்கள்

புத்தாண்டு பலன்கள்.
மீனம்: 2018 சகல ஞானமும் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கிடைக்கும் வருஷம். நிறைந்த திறமைசாலிகள் கிடைத்த பணியை விட்டுக் கொடுக்கமல் சாதித்து உயர்வு பெறுவீர்கள். எதிர்பாராத உயர்ந்த அந்தஸ்து பெறுவீர்கள். கலைத்துறை வாய்ப்பு தேடிவரும். ஒரே நேரத்தில் பல தொழில்கள் தொடங்கலாம் போட்டியாளர்களை தெறிக்கவிடுவீர்கள். வரன்கள் தேடி வரும் பிடித்த வரன்களை தேர்ந்து எடுத்து கெட்டிமேளம் கொட்டும். விஐபிக்களை சந்திப்போம் உறவுகளை பலபடுத்துவோம் அவர்கள் மூலம் வருமானம் வாய்ப்புகளை உருவாக்குவோம். குடும்பம் மரியாதை உயரும். 2018ல் தேர்தலில் நின்று வெற்றி பெறலாம் வாழ்த்துக்கள்.
அதிர்ஷ்ட எண்கள்- 3, 7.
அதிர்ஷ்ட நிறங்கள்- சிவப்பு, வெண்மை.
சிறப்பு வழிபாடு- ஸ்ரீ தட்சணாமூர்த்தி அஷ்டோத்திரம் படியுங்கள்.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles