.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 22.10.2017


22.10.2017 ஞாயிற்றுக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஐப்பசி மாதம் 5ம்தேதி.
சுக்லப்பட்சத்து (வளர்பிறை) திருதியைத் திதி பின்னிரவு 4.25 மணி வரைப் பின் சதுர்த்தி திதி.
விசாகம் நட்சத்திரம் மதியம் 12.51 மணி வரைப் பின் அனுஷம் நட்சத்திரம்.
இன்று முழுவதும் மரண யோகம்.
ராகுகாலம்- மாலை 4.30 முதல் 6 மணி வரை.
எமகண்டம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை.
நல்லநேரம்’- இன்று முழுவதும் மரணயோகம் இருப்பதால் நல்லநேரம் இல்லை.
சூலம்- மேற்கு.
ஜீவன்- 1/2; நேத்திரம்- 0;
திரு பூசலார் நாயனார் குருபூஜை.

22.10.2017 ஞாயிற்றுக்கிழமை ராசிபலன்.

மேஷம்: கடின பணிகள் உடல் அசதியைக் கொடுக்கும். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். திருச்செந்தூர் திரு சுப்பிரமணியரை தரிசனம் செய்யுங்கள்.

ரிஷபம்: திருமணம் பேசுங்கள் சுமுகமாக முடியும். எதிர்கால மனைவியுடன் கைப்பேசியில் உரையாடல் செய்து மகிழலாம். பல ஆசைகள் நிறைவேறும்.

மிதுனம்: போராட்டங்களைச் சந்திப்போம் ஊக்கம் பெறுவோம். தடைகளைத் தகர்ப்போம். வழக்குகள் வெற்றி பெறும்.

கடகம்: கடின உழைப்பாளி சாதனை படைத்து பரிசு பாராட்டுக்கள் பெறுவீர்கள். வெளியுலக செல்வாக்கு உயரும்.

சிம்மம்: கலையுலக திறமைகள் வளர்த்துக்கொள்வீர்கள். நடனம் கற்பீர். நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு அமையும். பிரபலங்களைச் சந்திப்போம்.

கன்னி: வாகனம் ஓட்டக் கற்று உரிமம் பெறலாம். சிலருக்கு வெளிநாட்டில் ட்ரைவிங் வேலைக் கிடைக்கும். குழந்தைகள் அன்பு பாசம் கிட்டும்.

துலாம்: வீட்டு உபயோக பொருள்கள் வாங்கலாம். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பணம் வரவுக்குப் பஞ்சமில்லை.

விருச்சிகம்: மனம் அலைபாயுதே. வெளியூர் சுற்றுலா சந்தோஷமாகச் செல்வோம். நண்பர்களுடன் குதூகலம் நிறைவாக அமையும்.

தனுசு: செலவுகள் பலமடங்கு உயரும். சொந்தபந்தங்கள் ஒன்று கூடும். தீடிர் பயணம் உருவாகும்.

மகரம்: லாபம் உயரும். வருமானம் வரும் வழிகளைக் கண்டறிந்து செயல்படுவீர். பிழைக்கத் தெரிந்தவர்கள்.

கும்பம்: இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் வெளிநாட்டில் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலைக் கிடைக்கும். இதனால் குடும்பம் பொருளாதார அந்தஸ்து கிடைக்கும்.

மீனம்: வேலை உயர்வுக்காக புதிய படிப்புகள் படித்து பாஸ் செய்வீர். வேலையில் புரமோஷன் வருமானம் உயர்வு கிடைக்கும். வேலை மாற்றம் செய்யலாம்.

நாளைச் சந்திப்போம்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles