.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 27.2.2018


செவ்வாய் கிழமை பஞ்சாங்கம்.

1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மாசி மாதம் 15ம்தேதி.
சுக்லப்பட்சத்து வளர்பிறை துவாதசி திதி மதியம் 12.55 மணி வரை பின் திரயோதசி திதி.
பூசம் நட்சத்திரம் பின்னிரவு 2.07 மணி வரை பின் ஆயில்யம் நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை.
எமகண்டம்- காலை 9 முதல் 10.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை 8 முதல் 9 மணி வரை. இரவு 7 முதல் 9 மணி வரை.
சூலம்- வடக்கு.
ஜீவன்- 1; நேத்திரம்- 2;
சிவ பிரதோஷம். ஸ்ரீ சிவ ஆலயத்தில் மாலை 5 மணி முதல் 7மணி வரை பிரதோஷம் வழிபாடு செய்யுங்கள்.
கரிநாள்.

27.2.2018 செவ்வாய்க்கிழமை ராசிபலன்.
மேஷம்: சந்தோஷம் நிறைந்த செயல்களை தொடங்கலாம். பெண்கள் அன்பு பாசம் வெளிப்படும். வெளிநாட்டு பெண் உதவி செய்வார்கள்.
ரிஷபம்: பலகாலம் அயல்நாடுகளில் வேலை பார்த்தவர்கள் சொந்த ஊர் திரும்புவார்கள். வங்கி சேமிப்பு உயரும். சேமித்த பணத்தை நல்ல காரியத்திற்கு பயன்படுத்தி கொள்வார்கள்.
மிதுனம்: தொழில் வளம் பெருக பரிகாரம் பூஜை ஹோமம் செய்து பலன் பெறுவார்கள். கடல் கடந்து பயணம் செய்து சம்பாதிக்கலாம்.
கடகம்: மகன் மகளின் திருமணம் பேசுங்கள் சுமுகமாக முடியும். சம்பந்தி உறவுகள் பலப்படும். இனிமையான பயணம் உருவாகும்.
சிம்மம்: ஆக்கபூர்வமான முயற்சி புதிய செயல் வடிவம் பெரும். நிறைந்த திருப்பம் உருவாகும். பழைய சம்பவங்களை நினைத்து சந்தோஷம் அடைவார்கள்.
கன்னி: மாப்பிள்ளை வீட்டுக்கு செல்லும் பாக்கியம் பெண்களுக்கு அமையும். குடும்ப உறுப்பினர்களுக்கு பரிசுகள் வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். செல்வம் சேரும்.
துலாம்: மனம் சோர்வுடையும் போது நல்ல நட்பு அமைந்து ஆரோக்கியமான கருத்து பரிமாற்றம் உருவாகும். புதிய பாதை அமையும்.
விருச்சிகம்: தொழில் அலுவலகம் தொடங்கி பணியை ஆரம்பிக்கலாம். நம்பிக்கையுடன் உதவிகள் கேட்போம் கிடைக்கும். செலவு உண்டு.
தனுசு: உங்கள் ஆற்றல் பிரதிபலிக்கும். எனினும் மனசஞ்சலம் உணடு. இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ துர்க்கை வழிபாடு செய்யுங்கள்.
மகரம்: சிறந்த வாழ்க்கை துனை அமையும். பொருப்புக்கள் குறையும். கம்ப்யூட்டர் வகுப்புகள் செல்வோம்.
கும்பம்: வளர்ச்சியை நோக்கிய பயணம். பலர் சந்திப்பு. உயர்ந்த சிந்தனை. திறமைகள் பரிணாம வளர்ச்சி பெறுவீர்கள்.
மீனம்: வரவேண்டிய பணம் வந்துவிட்டது. சுபநிகழ்ச்சிகளை தங்குதடையின்றி நடத்தலாம். மட்டற்ற மகிழ்ச்சி உருவாகும்.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles