.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 27.9.2017


27.9.2017 புதன்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் புரட்டாசி மாதம் 11ம்தேதி .
சுக்லப்பட்சத்து (வளர்பிறை) ஸப்தமி திதி இரவு 6.50 மணி வரை பின் அஷ்டமி திதி.
கேட்டை நட்சத்திரம் காலை 10.40 மணி வரை பின் மூலம் நட்சத்திரம்.
சித்த யோகம் காலை10.40 மணி வரை பின் மரண யோகம்.
ராகுகாலம்- மதியம் 12 மணி முதல் 1.30 வரை.
எமகண்டம்- 7.30 முதல் 9 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை 9 முதல் 10 மணி வரை.
சூலம்- வடக்கு.
ஜீவன்- 1/2; நேத்திரம்- 1;

27.9.2017 புதன்கிழமை ராசிபலன்கள்.

மேஷம்: இன்று காலை 10.40 மணியுடன் சந்திராஷ்டமம் முடிகிறது. மாறுதல் உருவாகும் நாள. இளைஞர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

ரிஷபம்: இன்று காலை 10.40மணி முதல் சந்திராஷ்டமம் கஷ்டங்கள் விலக ஸ்ரீ ஆஞ்சனேயரை தரிசனம் செய்யுங்கள். பகைவர்களைக் கண்டுகொள்ளவேண்டாம்.

மிதுனம்: சினிமா கலைஞர்களை சந்திப்போம். கனவு வரும் மகிழ்ச்சியான சூழ்நிலையில் வாழ்க்கை பாதை அமையும்.

கடகம்: கடல் கடந்த பயணம் வாய்ப்பு தேடிவரும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் ஆதாயம் நிறைந்திருக்கும். கடன் கொடுக்காதீர்கள்.

சிம்மம்: ஆச்சரியமான சந்திப்பு மனதில் சந்தோஷம் கொடுக்கும். சொந்த ஊரில் இடம் வாங்குவோம். கல்வி சிறப்பு.

கன்னி: ஆழ்ந்த சிந்தனை. சிந்தனை செயல் வடிவம் பெரும். கனவு கண்ட இடத்தில் வீடு வாங்குவோம்.

துலாம்: தொட்டதெல்லாம் பொன் ஆகும். புதிய ஆரம்பம் தொடங்கும். மற்றவர்கள் உங்களைப் புரிந்து கொள்ள முடியாது.

விருச்சிகம்: மனதில் தோன்றியதை உடனே பேசிவிடலாம். பள்ளி தோழரை பல வருடங்களுக்கு பிறகு சந்தித்து மகிழ்வீர்கள். பணம் வரும்.

தனுசு: இனிமையான நாள். திறமைக்கு அந்தஸ்து கிடைக்கும். உங்கள் படைப்பு பத்திரிகைகளில் பிரசுரமாகும். விட்டு போன வாய்ப்பு தேடிவரும்.

மகரம்: உரிமையை நிலைநாட்டுவீர். உணர்வு வேகம் கூடும். மேல் படிப்பு யோகம் கிடைக்கும்.

கும்பம்: மலர்ச்சியான நாள். ஆலயம் தரிசனம் சிறப்பு. பெண்களுக்கு வேலை மாற்றம் உருவாகும்.

மீனம்: தலைமை பதவி கிட்டும். நீங்கள் எழுதிய கதை திரைப்படமாகும். சமூக அங்கிகாரம் கிடைக்கும். தனம் சிறப்பு.

நாளை சந்திப்போம்.

– ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Call- 9842521669. 9244621669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles