.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 28.2.2018


28.2.2018 புதன்கிழமை பஞ்சாங்கம்.

1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மாதம் 16ம்தேதி.
சுக்லப்பட்சத்து வளர்பிறை திரயோதசி திதி காலை 10.13 மணி வரை பின் சதுர்த்தசி திதி.
ஆயில்யம் நட்சத்திரம் இரவு 12.45 மணி வரை பின் மகம் நட்சத்திரம்.
அமிர்த யோகம் இரவு 12.45 மணி வரை பின் சித்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை.
எமகண்டம்- காலை 7.30 முதல் 9 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 6.40 மணி வரை.
சூலம்- வடக்கு.
ஜீவன்- 1; நேத்திரம்- 2; .
கரிநாள்.

28.2.2018 புதன்கிழமை ராசிபலன்.
மேஷம்:பிரயாணம் சிறப்பு. நல்ல மனிதர் சந்திப்போம். உதவிகள் கேட்போம். மனமுவந்து செய்வார்கள்.
ரிஷபம்: பணவரவு மஹா திருப்தி. அனைத்து வேலைகளும் தடையின்றி நடக்கும். அரசியலில் பதவி கிட்டும்.
மிதுனம்: மாற்றங்கள் முயற்சிகள் என வேகமாக நடக்கும். கண்ணும் கருத்துமாக செயல்படுவீர். வருமானம் முயற்சிகள் வெற்றி பெறும்.
கடகம்: பிறந்த காலம் முதல் வாடகை வீட்டில் இருந்தவர்கள் சொந்த வீடு வாங்க கூடிய பாக்கியம் கிட்டும். ரியல் எஸ்டேட் தொழில் வருமானம் கிடைக்க தொடங்கும்.
சிம்மம்: தெய்வ நம்பிக்கை பிறக்கும். ஆலய பணியில் தங்களை ஈடுபடுத்தி கொள்வார்கள். எல்லாரிடமும் அன்பாக பழகுவோம்.
கன்னி: அன்பால் அனைவரையும் ஒருங்கிணைப்பீர்கள். அரசியல் கட்சியில் உங்களை பிரபலபடுத்திக் கொள்வார்கள். தொண்டர் கூட்டம் பெருகும்.
துலாம்: யோகம் கதவைத் தட்டும். சேமிப்பு அதிகரிக்கும். அந்தஸ்து கூடும். பலர் உங்களை சந்திக்க காத்திருப்பார்கள்.
விருச்சிகம்: குடும்ப சந்தோஷம் எல்லையில்லை. வளைகாப்பு கல்யாணம் பெயர் சூட்டுதல் பல சுபநிகழ்ச்சிகளால் உறவுகள் ஒன்று கூடும்.
தனுசு: இன்று இரவு 12.45 மணி முதல் சந்திராஷ்டமம். பார்ட்டி விருந்து ஆனந்தம் நிறைந்திருக்கும். பயணம் இருக்கும்.
மகரம்: இன்டர்நெட்டில் நேர்முகத்தேர்வில் பாஸாகி உடனே வேலை கிடைக்கும் விசா வந்து நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். இன்று இரவு 12.45 மணி முதல் சந்திராஷ்டமம்.
கும்பம்: கும்பிட போன தெய்வம் குருக்கே வந்தது போல் பல விஐபிக்களை எதிர்பாராமல் சந்தித்து காரியம் சாதித்து கொள்வீர்கள்.
மீனம்: உறவுகளை சந்திப்போம். சகோதரி உதவியால் வேலை வாய்ப்பு அமையும். வீட்டின் பக்கத்தில் பெண் கேட்பார்கள் சம்மதம் தெரிவிப்பீர்கள்.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles