.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 7.9.2017


7.9.2017 வியாழன் கிழமை
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஆவணி மாதம் 22ம் தேதி
கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) பிரதமை திதி மதியம் 12.35 மணி வரை பின் துதியைத் திதி.
பூரட்டாதி மதியம் 2.22 மணி வரை பின் உத்திரட்டாதி நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
நல்ல நேரம் – காலை 10.45 முதல் 11.45 மணி வரை.
ராகுகாலம் – மதியம் 1.30 முதல் 3 மணி வரை.
எமகண்டம் – காலை 6 முதல் 7.30 மணி வரை.

7.9.2017 ராசி பலன்கள்.

மேஷம்: திருமணம் பேசுங்கள் கைகூடிவரும். கைப்பேசி உறவுகள் மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்கும்.

ரிஷபம்: புதிய தேடல் உருவாக்கும். கடன்களை அடைத்துவிடுவீர்கள். பிரயாணம் அனுபவத்தை தரும்.

மிதுனம்: ஜோதிடர்களுக்கு அனுகூலமான நாள். எதிர்காலத்தை திட்டமிடலாம். தெய்வ கடாட்சம் கிடைக்கும்.

கடகம்: பாக்கியம் நிறைந்த நாள் சொந்த வீடு வாங்கலாம். ரியல் எஸ்டேட் தொழில் சிறப்பான ஆதாயம் தரும்.

சிம்மம்: இன்று காலையில் 8.17 மணி முதல் சந்திராஷ்டமம். சந்திராஷ்டமம் தோஷம் நீங்க ஸ்ரீ தட்சனாமூர்த்திக்கு 3 நெய் தீபம் ஏற்றுங்கள். யானையைத் தரிசியுங்கள்.

கன்னி: அழகிய பெண் மணமகளாக அமைவாள். காதல் மலரும். சினிமா தொலைக்காட்சியில் நடிக்க வாய்ப்பு அமையும்.

துலாம்: அலைச்சல் அதிகரிக்கும். தொலைதூர பயணம் உருவாக்கும். மரியாதை புகழ் கிடைக்கும்.

விருச்சிகம்: ஆலய தரிசனம் வெற்றிகளைக் கொடுக்கும். குழந்தைகள் கல்வியில் சிறப்பான மதிப்பெண்கள் எடுப்பார்கள்.

தனுசு: வீடு கட்ட வங்கி கடன் கிடைக்கும். இஞ்சினியரிங் வாஸ்து கலைஞர்களுக்கு உயர்வான நாள். தாயின் அன்பு கிடைக்கும்.

மகரம்: முயன்றால் முடிப்பீர்கள். உறவுகள் உதவி செய்வார்கள். சகோதர சகோதரிகளுக்கு நல்ல வேலை அமையும்.

கும்பம்: திடமான நம்பிக்கை பிறக்கும். எதிர்காலம் முன்னேற்றம் குறித்து சில மாற்றங்களை உருவாக்குவீர்கள்.

மீனம்: உடல் ஆரோக்கியம் பேணுவீர்கள். எதிர்பாராமல் பணம் வரும். பெண்கள் அன்பு கிடைக்கும்.

நாளை சந்திப்போம்

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles