.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 8.12.2017


8.12.2017 வெள்ளிக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் கார்த்திகை மாதம் 22ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) பஞ்சமி திதி காலை 10.50 மணி வரை பின் ஷஷ்டி திதி.
ஆயில்யம் நட்சத்திரம் இரவு 12.36 மணி வரை பின் மகம் நட்சத்திரம்.
இன்று முழுவதும் மரண யோகம்.
ராகுகாலம்- காலை 10.30 முதல் 12 மணி வரை.
எமகண்டம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை.
நல்லநேரம்- இல்லை
சூலம்- மேற்கு.
ஜீவன்- 0; நேத்திரம்- 2;.

8.12.2017 வெள்ளிக்கிழமை ராசிபலன்.

மேஷம்: சந்தோஷமாக இருப்பார்கள் குடும்பத்தினர். உத்தியோகத்தில் இருந்த மறைமுக நெருக்கடி தீரும். புதிய நிர்வாகம் உங்களுக்கு உதவுவார்கள்.
ரிஷபம்: மனைவி வழி உறவுகள் ஆதரவும் உதவியும் தொடர்ந்து கிடைக்கும். சில தந்திரத்தை கையாழ்வார்கள்.

மிதுனம்: கண்டும் காணாமல் சென்றவர்கள் வழியவந்து உதவுவார்கள். உத்தியோகத்தில் சக உழியர்கள் ஒத்துழைப்பார்கள். புத்துணர்ச்சி உருவாகும்.

கடகம்: வியாபாரத்தில் ரெட்டிப்பு வருமானம் கிடைக்கும். இனம்புரியாத இன்பம் கிட்டும். சுற்றுலா செல்லலாம். உல்லாசமாக இருக்கலாம்.

சிம்மம்: தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பதற்காக அழைப்பார்கள். போட்டிகளை லாவகமாக சமாளிப்போம். பாராட்டுக்கள் கிடைக்கும்.

கன்னி: கன்னியம்மாக நடந்து கொள்வீர்கள். பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். உயர் அதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள்.

துலாம்; எதிர்ப்புக்களை முறியடிப்போம் தடைகளை உடைத்தெறிவோம். கலைப் பொருள்கள் வாங்கலாம். உழைப்பால் உயரும் நாள்.

விருச்சிகம்: வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர புதிய சலுகைகள் கவர்ச்சி திட்டங்கள் அறிமுகம் செய்வீர்கள். உங்கள் திட்டங்கள் வெற்றியடையும்.

தனுசு: தாய் வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடு தோன்றும். இன்று இரவு 12.46. மணி வரை சந்திராஷ்டமம். ஸ்ரீ அனந்த சயன பெருமாள் தரிசனம் செய்யுங்கள்.

மகரம்; தீடிர் முடிவுகள் எடுப்பீர்கள். உங்கள் முடிவு உங்களுக்கே குழப்பத்தை கொடுக்கும். இன்று இரவு 12.46 மணிக்கு பிறகு சந்திராஷ்டமம். ஸ்ரீவிநாயகரை தரிசனம் செயது உறங்குங்கள்.

கும்பம்: பிரபலங்கள் அறிமுகம் கிட்டும். சந்திப்பு பூரிப்பைக் கொடுக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து கூடும்.

மீனம்: பிள்ளைகள் வருங்கால திட்டம் ஒன்று நிறைவேறும். சிக்கனமாக செலவழித்து சேமிப்பு உயர்த்துஉயர்த்துவோம்.

Astro தெய்வீகம் மாரிமுத்து சென்னை. தூத்துக்குடி. 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles