.
.

.

Latest Update

குரு பெயர்ச்சி பலன்கள் – மகரம்


குரு பெயர்ச்சி பலன்கள் – மகரம்

நட்சத்திரம் – உத்திராடம் 2,3,4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2ம் பாதம்

2.9.2017 காலை 6.39 மணிக்கு கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்து 3.10.2018 வரை சஞ்சாரம் செய்ய இருக்கிறார். இந்த குரு பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும், அவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை பார்போம்

இதுவரை பாக்கியஸ்தானமாகிய 9ம் இடத்தில் இருந்து வந்த குரு பகவான் 10ம் இடமாகிய துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதுவரை பாக்கிய சுகங்களை அனுபவித்து கொண்டிருந்த நீங்கள் தொழிலில் சில தடுமாற்றத்தையும் விரையங்களையும் சந்திக்கயுள்ளீர்கள். ஆனாலும் உங்கள் நல்ல பெயருக்கு கலங்கம் வராமல் காரியங்களை நடத்திக் கொள்வீர்கள்.

கடுமையாக உழைத்தாலும் தொழிலில் சில விரையங்கள், சேதாரங்களை தவிர்க்க முடியாது. அதை பற்றி கவலை படாமல் மன தைரியத்துடன் செயலாற்றுங்கள். குடும்பத்தில் பிள்ளைகளுக்கான கல்வி செலவு, சுபகாரிய செலவுகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய திறமைகளை கூர் தீட்டி கொண்டால் தான் எதிர்பாராத சிக்கல்களில் இருந்தும் சிரமங்களில் இருந்தும் தப்பித்து கொள்ளலாம். மாணவர்கள் நல்ல முறையில் படிப்பார்கள், ஆனால் கெட்ட சகவாசங்களை தவீர்க்கவும்.

மொத்தத்தில் சுப விரையங்களுடன் சந்தோஷத்தையும் அனுபவிக்கும் நேரம் இது. தொழில், உத்யோகத்தில் கவனம் வேண்டும்.

வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று வழிபடுங்கள். ராமேஸ்வரம் அருகே உள்ள தேவிப்பட்டினம் சென்று நவகிரகங்களை வழிபடுங்கள்

அதிர்ஷ்ட எண்கள் 3,8
அதிர்ஷ்ட நிறங்கள் மஞ்சள், கருப்பு
பலன்கள் சதவிதம் – 40%

– அஸ்ட்ரோ தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி.cel- 9842521669. 9244621669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )