.
.

.

Latest Update

குரு பெயர்ச்சி பலன்கள் – மீனம்


குரு பெயர்ச்சி பலன்கள் – மீனம்

நட்சத்திரம் – புரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

2.9.2017 காலை 6.39 மணிக்கு கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்து 3.10.2018 வரை சஞ்சாரம் செய்ய இருக்கிறார். இந்த குரு பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும், அவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை பார்போம்.

இதுவரை 7ம் இடத்தில் இருந்த குரு பகவான் இப்பொழுது பெயர்ச்சி ஆகி 8ம் இடமாகிய அஷ்டமத்து ஸ்தானதிற்கு செல்கிறார்.

இதுவரை சிறந்த நண்பர்கள் சமூக மதிப்பு என்று உயரே பறந்து கொண்டிருந்த உங்கள் கொடி கவனம் இல்லாவிடில் சரிவை சந்திக்கும் காலம் இது. ஆனாலும் தனவரவு தங்கு தடையில்லாமல் வந்துக் கொண்டே இருக்கும். சொத்துக்கள் சேர்ப்பது தொடரும்.

எதிரிகள் சற்றே பலமடைந்து உங்களை அசைக்க முற்படுவார்கள். நீங்கள் அவர்களின் சூழ்ச்சிகளை அறிந்து கொண்டு எதிலும் சிக்காமல் தப்பித்திக் கொள்வீர்கள். பிள்ளைகளால் மன வருத்தம் ஏற்படலாம். மாறாக அவர்களை நல்வழி படுத்த முயற்சிக்கவும். தொழிலில் நஷ்டம் வரும் என்பதால் புது தொழில் முயற்சியை கவனமுடம் கையாள வேண்டும்.

குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து போக பழகுங்கள். வீண் வாக்கு வாதம் வேண்டாம். மாணவர்கள் மிகுந்த கவனத்துடன் இரவு பகல் பாராமல் படித்தால் தான் நல்ல மதிப்பெண் பெற முடியும்.

மொத்தத்தில் தடுமாற்றங்களை சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டாலும் உங்கள் புத்தி கொண்டு சமாளிப்பீர்கள்.

திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வழிபடுங்கள். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை தரிசிக்கவும்.

அதிர்ஷ்ட எண்கள் 3,7
அதிர்ஷ்ட நிறங்கள் மஞ்சள், இளஞ்சிவப்பு
பலன்கள் சதவிதம் – 38%

– அஸ்ட்ரோ தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி.cel- 9842521669. 9244621669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )