.
.

.

Latest Update

குரு பெயர்ச்சி பலன்கள் – தனுசு


குரு பெயர்ச்சி பலன்கள் – தனுசு

நட்சத்திரம் – மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்

2.9.2017 காலை 6.39 மணிக்கு கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்து 3.10.2018 வரை சஞ்சாரம் செய்ய இருக்கிறார். இந்த குரு பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும், அவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை பார்போம்

இதுவரை உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் இருந்த குரு பகவான் லாபஸ்தானமாகிய 11ம் இடத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். இதுவரை 10ம் இடத்தில் இருந்து கொண்டு தொழில் உத்தியோக வாய்ப்புகளை தடுமாற வைத்து கொண்டிருந்த குரு பகவான் லாபஸ்தானம் வருவது மிகச்சிறப்பு.

தொழிலை விரிவு படுத்தும் எண்ணம் மேலோங்கும். உத்யோக உயர்வு, புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும் காலம் இது. குழந்தை பாக்கியம் கிடைத்து குதுகலம் அடைவீர்கள். சமுகத்திலும் சுற்றத்தார்களிடமும் உங்கள் மதிப்பு மரியாதை உயர்ந்து உங்களை மகிழ்ச்சி அடைய வைக்கும்.

வேலை பளு அதிகமாக இருந்தாலும் அதற்கேற்ற வகையில் தொழில் வரவுகள், உத்யோக வருமானம் அதிகரிக்கும்.

மொத்தத்தில் கடுமையாக உழைத்தாலும் களிப்பான பலன்களை அடையும் நேரம் இது. கவலையின்றி காலத்தை செலுத்துங்கள்.

திருப்பதி சென்று பெருமாளை தரிசிக்கவும். மகாலஷ்மி வழிபாடு மேற்கொள்ளுங்கள். குபேரன் கோவிலுக்கு சென்று வழிபடுங்கள்

அதிர்ஷ்ட எண்கள் 3,7
அதிர்ஷ்ட நிறங்கள் மஞ்சள், நீலம்
பலன்கள் சதவிதம் – 93%

– அஸ்ட்ரோ தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி.cel- 9842521669. 9244621669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )