.
.

.

Latest Update

குரு பெயர்ச்சி பலன்கள் – விருச்சிகம்


குரு பெயர்ச்சி பலன்கள் – விருச்சிகம்

நட்சத்திரம் – விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை

2.9.2017 காலை 6.39 மணிக்கு கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்து 3.10.2018 வரை சஞ்சாரம் செய்ய இருக்கிறார். இந்த குரு பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும், அவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை பார்போம்

இதுவரை லாபஸ்தானத்தில் இருந்த குரு பகவான் விரையஸ்தானமாகிய 12ம் இடத்திற்கு பெயர்ச்சி அடைகிறார்.

தொழில் வகையில் எழரை சனியின் பாதிப்புகளை மீறி இதுவரை லாபம் பார்த்துக்கொண்டிருந்த நீங்கள் தற்போது விரையங்களை சந்திக்க இருக்கிறீர்கள். வீண் அலைச்சல்கள் ஏற்படும் காலம் இது. சொந்த பந்தங்களுடன் அதிகம் நெருங்கி பழகாதீர்கள். மருத்துவ பரிசோதனைகளை முறையாக செய்து கொள்ளுங்கள். முடிந்தால் மருத்துவமனையில் இருக்கும் உறவினர்களுக்கு உடன் சென்று உதவியாக இருங்கள்.

வாழ்க்கை துணையை புரிந்து கொண்டு செயல்பட முயற்சி செய்யுங்கள். யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். அதிக வட்டி செலுத்துக்கூடிய கடன்களை குறைத்து கொள்ளுங்கள். பழைய வீட்டை சீர் செய்யும் திட்டம் இருந்தால் செயல் படுத்துங்கள். மாணவர்கள் பரிட்சை நேரத்தில் உடல் நலத்தை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்.

மொத்தத்தில் விழிப்புணர்வும் விவேகமும் தேவைப்படும் காலம் இது. வேகம் வேண்டாம்.

சபரிமலை சென்று வாருங்கள். நாமக்கல் அல்லது சுசீந்திரம் ஆஞ்சநேயரை வழிபடுங்கள். காகத்திற்க்கு தினமும் சாதம் வைத்தால் சீரமம் குறையும்

அதிர்ஷ்ட எண்கள் 3,9
அதிர்ஷ்ட நிறங்கள் சிவப்பு, மஞ்சள்
பலன்கள் சதவிதம் – 45%

– அஸ்ட்ரோ தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி.cel- 9842521669. 9244621669.

Reviews

  • Total Score 0%
User rating: 90.00% ( 1
votes )


Related articles