.
.

.

Latest Update

நவராத்திரி கொலு வைக்கும் முறைகள் என்ன?


நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதேயாகும். கொலு என்பது பல படிகளைக் கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பதேயாகும்.
ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளைச் சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூசிப்பவர்களிற்கு சகல நலங்களையும் தருவேன் என்று அம்பிகையே கூறியிருக்கின்றாள்.

இனி நவ ராத்திரி கொலு எப்படி அமைக்க வேண்டும் என்று பார்ப்போம்.
கொலு மேடை 9 படிகள் கொண்டதாக இருக்க வேண்டும்.

1. முதலாம் படி :–
ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவரவர்கங்க ளின் பொம்மை கள்.

2. இரண்டாம் படி:-
ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள்.

3. மூன்றாம் படி :-
மூன்றறிவு உயிர்களான கறையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகள்.

4. நாலாம்படி :-
நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு ,வண்டு போன்றவற்றின் பொம்மைகள்.

5. ஐந்தாம்படி :-
ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகள்.

6. ஆறாம்படி :-
ஆறறிவு மனிதர்கள் பொம்மைகள்.

7. ஏழாம்படி :-
மனித நிலையிலிருந்து உயர்நிலையை அடைந்த சித்தர்கள், ரிஷிகள், மகரிஷிகள் (ரமணர், வள்ளலார்) போன்றோரின் பொம்மைகள்.

8. எட்டாம்படி :-
தேவர்கள், அட்டதிக்பாலர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள் தேவ தைகள் போன்றோரின் பொம்மைகள்.

9. ஒன்பதாம்படி :-
பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் அவர்களின் தேவியருடன் நடுநாயகமாக ஆதிசக்தி வைக்கவேண்டும்.

மனிதன் படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலையை அடைய வேண்டும் என்பதற்காகவே இப்படி கொலு அமைப்பது வழக்கம்.

🙏🏿🍀சிவ சித்தர்ந்தம்🍀🙏🏿

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Call- 9842521669. 9244621669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles