.
.

.

Latest Update

ஆனி மாதத்தின் கேட்டை நட்சத்திர நாளில் ‘ஜேஷ்டாபிஷேகம்’ விழா ஆலயங்களில் வெகு சிறப்பாக நடைபெறும்


ஜேஷ்ட மாதம் என அழைக்கப்படுகிற இந்த ஆனி மாதத்தின் கேட்டை நட்சத்திர நாளில் ‘ஜேஷ்டாபிஷேகம்’ விழா ஆலயங்களில் வெகு சிறப்பாக நடைபெறும். குறிப்பாக பழனியில் ஜேஷ்டாபிஷேகம் ரொம்ப பிரபலம். கேட்டை நட்சத்திரத்தை ஜேஷ்டா நட்சத்திரம் என்றும் சொல்வர்.

கேட்டை நட்சத்திரத்திற்கு உரிய தேவதை இந்திரன். தேவர்களின் ஜேஷ்டனான, அதாவது, மூத்தவனான, தலைமைப் பொறுப்பு வகிக்கின்ற இந்திரன் தனது தலைமைப் பொறுப்பினை தக்க வைத்துக் கொள்ள வும், புதிய சக்திகளைப் பெறவும், இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுகின்ற நாள் தான், ஆனி மாதத்தின் கேட்டை நட்சத்திர நாள்.

ஆனி மாதத்தின் கேட்டை நட்சத்திர நாளில், உயர் பதவியில் உள்ள அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், பெரிய நிர்வாகத்தைக் கட்டி ஆளும் தொழில் அதிபர்கள் என பதவி சுகம் கண்டு வருபவர்கள் எல்லாம் கோயிலுக்குச் சென்று இறைவனுக்கு அபிஷேகம், பூஜைகள் செய்து வழிப்பட்டால், பதவி நிலைக்கும்.

ஜேஷ்டா என்றால் பெரிய என்று பொருளாகும். பகல் நேரம் நீண்டிருக்கும் மாதமான ஆனி மாதம், ஜேஷ்டா மாதம் என்று அழைக்கப்படுகிறது. இக்காலத்தில் கோயில்களில் நடைபெரும் அபிசேக விழாக்கள், ஜேஷ்டாபிஷேகம் என்று அழைக்கப்படுகிறது

உன்னதமான வாழ்வுக்கும் உயர்வான சிந்தனை உள்ள வாழ்வுக்கும் வாழ்கைக்கும் நூறு சதவீதம் உத்திரவாதம் தரும் ஒரே ஜோதிட நிலையம் ஸ்ரீ கால பைரவி
ஜோதிட நிலையம் விஞ்ஞான மருத்துவ ஜோதிடம் மற்றும் வானியல் மருத்துவம் ஆத்தூர்.அரசு மருத்துவமனை எதிரில் ஆத்தூர் சேலம் (மாவட்டம்)
636102 சிறந்த முறையில் வாழ்வை மாற்ற ஜோதிடம் மற்றும் வாஸ்து சம்மந்தமான ஆலோசனை பெறுவதற்க்கு ஜோதிட ஆசான் மு.கிருஷ்ண மோகன் 8526223399 , 9976192660 , 9843096462

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )