.
.

.

Latest Update

இறந்தவர்களின் திதி பார்த்து தர்ப்பணம் கொடுப்பது வாழ்க்கையில் சில மாற்றங்களை ஏற்படுத்தும்


நாம் பூஜைகள், புனஸ்காரங்கள், பரிகாரங்கள் செய்வது எவ்வளவு முக்கியமோ அதைவிட பல மடங்கு முக்கியமானது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதும், பிண்டம் வைப்பதும் ஆகும். இறந்தவர்களின் திதி பார்த்து தர்ப்பணம் கொடுப்பது வாழ்க்கையில் சில மாற்றங்களை ஏற்படுத்துவதை பலரும் கண்கூடாக அனுபவித்திருப் பீர்கள். சிலர் இந்த பழக்கத்தை கடைபிடிக்க மாட்டார்கள். சிலர் முறையாக தொடர்ந்து கடைபிடிக்காமல், அவர்களுக்கு நினைவு இருக்கும் பொழுது செய்து விடுவார்கள். மற்றபடி தொடர்ந்து செய்வதை வாடிக்கையாக வைத்திருக்க மாட்டார்கள்.

உண்மையில் கூற வேண்டுமெனில் ஒவ்வொரு வருடமும் தவறாமல் அவர்களின் இறந்த திதி அன்று திதி கொடுப்பது உங்களுடைய சந்ததியினருக்கு செல்வவளத்துடன் வாழ்க்கை அமையும். இது பல பேரால் அறியப்படாத ஒன்றாக இருக்கிறது. நீங்கள் ஆசை ஆசையாக வளர்த்துக் கொண்டிருக்கும் மரம், திடீரென்று பட்டுப்போய் உபயோகப்படாமல் போய்விடும். மீண்டும் துளிர் விடாமல் அப்படியே இறந்துவிடும். இதுபோன்ற நிகழ்வுகள் உங்களுக்கு வர இருக்கும் பாதிப்பை தடுத்து நிறுத்துவதற்காக நடைபெறுகிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். நமக்கு வர இருக்கும் ஆபத்தை நம் வீட்டில் இருக்கும் உயிருள்ள சில ஜீவன்கள் எடுத்துக்கொள்வதாக சாஸ்திரத்தில் குறிப்புகள் உள்ளன. அதில் மரங்கள், விலங்குகள், கடல் வாழ் உயிரினங்கள், பறவைகள் போன்றவையும் அடங்கும்.

நாம் நன்றாக இருப்பதை சிலர் விரும்புவதில்லை.
அவர்களின் கண் திருஷ்டியும், வயிற்றெரிச்சலும் சில நேரங்களில் நம்மை அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்திவிடும். இதில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள நம் வீட்டில் ஏதேனும் ஒரு உயிருக்கு உணவளித்து வளர்த்து வருவது நல்லது. இவ்வகையில் மரங்களும் நமக்கு பெரும் துணை புரிகின்றன. அதேபோல் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகள் நமக்கு வரும் பேராபத்தை ஈர்த்துக் கொள்கின்றன. அதன் காரணமாக அந்த விலங்குகள் இறந்து விடுகின்றன. இவ்வாறு வளர்க்கப்படும் மரங்களோ அல்லது செல்லப்பிராணிகளோ இறந்துவிட்டால், இறந்த அந்த உயிரை நினைத்து பிண்டம் வைப்பது உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதிர்பாராத அளவிற்கு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

நீங்கள் உங்களது முன்னோர்களை நினைத்து கொண்டு பிண்டம் வைக்கும் பொழுது இந்த ஜீவன்களை நினைத்தும் பிண்டம் வைத்து வழிபட்டு மனதார வேண்டிக் கொண்டால் போதும், வாழ்க்கை யில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் நீங்கி நல்வாழ்வு அமையும் என்பது நிச்சயமான உண்மை. இதை தற்போது நடைமுறையில் பலரும் பின்பற்றி வருகின்றனர். நீங்களும் உங்கள் முன்னோர்களுக்கு பிண்டம் வைக்கும் பொழுது உங்கள் வீட்டில் இறந்து போன மரத்தையோ அல்லது செல்ல பிராணியையோ மனதில் நினைத்து பிண்டம் வையுங்கள். வாழ்வில் அதிசயத்தை காணுங்கள்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )