.
.

.

Latest Update

குரு பகவானின் அருள் மேலும், மேலும் வேண்டும் என்பவர்கள் செய்தால் மட்டும் போதும்.


குருவுக்கு பரிகாரம் என கூறுவதானால் வியாழக்கிழமைகளில் குருவுக்கு விளக்கேற்றி, அர்ச்சனை செய்து வழிபடலாம். தட்சிணாமூர்த்தி சன்னிதி உள்ள கோவில்களில் தட்சிணா
மூர்த்திக்கு அர்ச்சனை செய்து வழிபடலாம்.மேலும் முடிந்தவர்
கள் தட்சிணாமூர்த்திக்கோ, அல்லது குருவுக்கோ அபிஷேகம் செய்து, வஸ்திரம் சார்த்தி, கொண்டைக் கடலையை ஒரு தட்டிலோ அல்லது கூடையிலோ போட்டு தானம் செய்வது நல்லது. இந்த தானம் கட்டாயம் கிடையாது. குரு பகவானின் அருள் மேலும், மேலும் வேண்டும் என்பவர்கள் செய்தால் மட்டும் போதும்.

தகப்பனுக்கே உபதேசம் செய்த முருகன், குரு ஷேத்திரமானதிருச்செந்தூருக்கு அதிபதி. திருச்செந்தூரில் கோவில் கொண்டிருக்கும் முருகப்பெருமான் ஸ்தலமும் குரு ஸ்தலமாக கருதப்படுகிறது.

குரு காயத்ரி மந்திரம்:

ஓம் விரு‌ஷபத் வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குருஹ் ப்ரசோதயாத்

பொது பொருள்: இடப்பக்கத்தில் கொடியை வைத்திருக்கும் குரு பகவானே, எப்போதும் உங்கள் அருட்கரங்களால் அருள்மழை பொழியும் ப்ரகஸ்பதியே, என் வாழ்வில் உள்ள தீமைகளை அகற்றி நன்மைகளை அளித்திட வேண்டுகிறேன்.

குரு மந்திரம் :

தேவாணாஞ்ச ரிஷிணாஞ்ச
குரும் காஞ்சன ஸந்நிபம்
புத்தி பூதம் திரிலோகேஸம்
தம் நமமி பிருகஸ்பதிம்

குரு சுலோகம் :

குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ

உன்னதமான வாழ்வுக்கும் உயர்வான சிந்தனை உள்ள வாழ்வுக்கும் வாழ்கைக்கும் நூறு சதவீதம் உத்திரவாதம் தரும் ஒரே ஜோதிட நிலையம் ஸ்ரீ கால பைரவி
ஜோதிட நிலையம் விஞ்ஞான மருத்துவ ஜோதிடம் மற்றும் வானியல் மருத்துவம் ஆத்தூர்.அரசு மருத்துவமனை எதிரில் ஆத்தூர் சேலம் (மாவட்டம்)
636102 சிறந்த முறையில் வாழ்வை மாற்ற ஜோதிடம் மற்றும் வாஸ்து சம்மந்தமான ஆலோசனை பெறுவதற்க்கு ஜோதிட ஆசான் மு.கிருஷ்ண மோகன் 8526223399 , 9976192660 , 9843096462

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles