.
.

.

Latest Update

தட்சிணாமூர்த்தி திருவுருவக் காரணம்


அறுபத்து நான்கு சிவ திருமேனிகளுள் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகவும். தட்சிணம் என்றால் தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள் கொள்ளலாம். த-அறிவு, க்ஷ-தெளிவு, ண-ஞானம் என இம்மூன்றும் பீஜ மந்திரங்களும், அவற்றின் பொருளாகும்.

தட்சிணாமூர்த்தியை தென் திசை கடவுள் என்று சைவர்கள் குறிப்பிடுகின்றார்கள். சிவ தலங்களில் கருவறையின் தென் சுவரின் வெளிப்புறத்தில் இவ்வடிவம் காணப்படுகிறது. தட்சிணாமூர்த்தியை குரு என்ற பெயரிலும் அழைக்கின்றார்கள்.

பஞ்சகுண சிவமூர்த்திகளில் தட்சிணாமூர்த்தி சாந்த மூர்த்தி என்று அறியப்பெறுகிறார்.

படைப்பின் கடவுளான பிரம்மாவின் குமார்களான சநகர், சநந்தனர், சனத்குமாரர், சதானந்தர் ஞானம் பெறுவதற்காக குருவினை நாடிச் சென்றார்கள். பிரம்மா படைப்பு தொழிலில் மூழ்கியதாலும், திருமால் இல்லறத்தில் ஈடுபடுவதாலும் அவர்களை விலக்கி வேறு குருவினை தேடிச் சென்றார்கள்.

இதனை உணர்ந்த சிவபெருமான் தானும் சத்தியுடன் இருப்பதை கண்டால் பிரம்ம குமாரர்கள் ஏமாற்றம் அடைந்துவிடுவார்கள் என்று பதினாறு வயது சிறுவனாக வடவிருட்சத்தின் கீழ் அமர்ந்து வரவேற்றார். பிரம்ம குமாரர்களின் ஞானத்தினைப் பற்றிய கேள்விகளுக்கு தட்சிணாமூர்த்தியாக இருந்து சிவபெருமான் பதில் தந்தார். எனினும் ஞானத்தின் கேள்விகள் அதிகரித்த வண்ணமே இருந்தன. பின்பு தட்சிணாமூர்த்தி சின் முத்திரையை அவர்களுக்கு காண்மித்தார். பிரம்ம குமாரர்களுக்கு அமைதியும், ஆனந்தமும் உண்டாயிற்று. அவர்கள் ஞானம் பெற்றனர்.

தட்சிணாமூர்த்தி நான்கு கைகள் கொண்டு ஆலமரத்தின் கீழ் தென்திசையை நோக்கி அமர்ந்துள்ளார். அவருடைய வலதுகால் ‘அபஸ்மரா’ என்ற அரக்கனை மிதித்த நிலையில் அமர்ந்துள்ளார். அபஸ்மரா அறியாமையை / இருளை குறிக்கின்றது. அவரது ஒரு மேல் கையில் ஒரு ருத்திராட்ச மாலையையும் / ஒரு பாம்பையும் பிடித்துள்ளார். அவரது மற்றொரு மேல் கையில் நெருப்பை கொண்டுள்ளார். அவருடைய கீழ் இடது கையில் தர்பைப் புல்லை / ஓலைச்சுவடி வைத்துள்ளார், கீழ் வலது கையில் ஞான முத்திரையையும் காட்டுகிறார். அவர் தியானத்தில் இருப்பதாக கருதப்படுகிறது.

உன்னதமான வாழ்வுக்கும் உயர்வான சிந்தனை உள்ள வாழ்வுக்கும் வாழ்கைக்கும் நூறு சதவீதம் உத்திரவாதம் தரும் ஒரே ஜோதிட நிலையம் ஸ்ரீ கால பைரவி
ஜோதிட நிலையம் விஞ்ஞான மருத்துவ ஜோதிடம் மற்றும் வானியல் மருத்துவம் ஆத்தூர்.அரசு மருத்துவமனை எதிரில் ஆத்தூர் சேலம் (மாவட்டம்)
636102 சிறந்த முறையில் வாழ்வை மாற்ற ஜோதிடம் மற்றும் வாஸ்து சம்மந்தமான ஆலோசனை பெறுவதற்க்கு ஜோதிட ஆசான் மு.கிருஷ்ண மோகன் 8526223399 , 9976192660 , 9843096462

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )