.
.

.

இன்றைய ராசி பலன்கள் – 11.4.2018


11.4.2018 புதன்கிழமை பஞ்சாங்கம்.

1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் பங்குனி மாதம் 28ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து தேய்பிறை தசமி திதி காலை 6.03 மணி வரை பின் ஏகாதசி திதி.
அவிட்டம் நட்சத்திரம் மதியம் 12.47 மணி வரை பின் சதயம் நட்சத்திரம்.
மரண யோகம் மதியம் 12.47 மணி வரை பின் சித்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை.
எமகண்டம்- காலை 7.30 முதல் 9 மணி வரை.
நல்லநேரம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை. மாலை 6 முதல் 8 மணி வரை.
சூலம்-வடக்கு.
ஜீவன்-1/2; நேத்திரம்-1;
இன்று ஏகாதசி திதி ஸ்ரீபெருமாள் தரிசனம் சிறப்பு.

11.4.2018 புதன்கிழமை ராசிபலன்.
மேஷம்: இஷ்ட தெய்வ தரிசனம் கிடைக்கும். இறைபலனால் முக்கிய காரியங்கள் நிறைவேறும். விருந்தினர் வருகை மகிழ்ச்சி தரும்.
ரிஷபம்: திடமான நம்பிக்கை தொழில் போட்டிகளில் வெல்வார். நிறைந்த தனவரவு கிட்டும். உண்மை நேர்மையாக வாழ்க்கை பாதையை அமைப்போம். திருமணம் பாக்கியம் கைக்கூடும்.
மிதுனம்: திறமைகள் இருந்தும் பயன் இல்லாமல் விரக்தி தோன்றும். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ திருப்பதி வெங்கடாசலபதி தரிசனம் செய்யுங்கள்.
கடகம்: தொலைத்துர பயணம் மாற்றம் முன்னேற்றம் உருவாகும். பல உறவுகளை சந்திப்போம். சந்தோஷம் அடைவார்கள்.
சிம்மம்: புதிய கடமைகள் உருவாகும். இதுவரை வராமல் இருந்த பணம் வந்து சேரும். அரசியல் பதவி தேடி வரும். மக்கள் தொண்டு செய்யுங்கள்.
கன்னி: அந்தஸ்து புகழ் தானே வந்து சேரும். உறவினர்களுக்கு வேலை வாங்கி கொடுப்பீர்கள். சகோதரி உதவி செய்வார்கள்.
துலாம்; வெளிநாட்டில் வேலை கிடைக்கும். குடும்பம் பொருளாதார ஏற்றம் உண்டாகும். முக்கிய விஐபி சந்திப்பு நிகழும்.
விருச்சிகம்: வியாபாரி எந்த காரியத்திலும் லாபம் பார்க்கலாம். கமிஷன் ரியல் எஸ்டேட் தொழில் விருத்தி செய்யலாம். பணம் பலவழிகளில் வரும்.
தனுசு: நீங்கள் தொடங்கிய செயல் வெற்றி தரும். மாணவர்களுக்கு கல்வி உயர் மதிப்பெண் கிட்டும். எதிர்காலம் சிறப்பு.
மகரம்; குழந்தைகளின் எதிர்காலம் திட்டங்கள் தீட்டி பணம் சேர்த்து விடுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பு. பெரியோர்கள் ஆசிர்வாதம் கிட்டும்.
கும்பம்; குடும்ப பொறுப்புகளை எற்று செயல்படுவோம். உங்கள் ஆணைக்கு அனைவரும் கட்டுபடுவார்கள். பாகப்பிரிவினை சிறப்பாக நடக்கும்.
மீனம்: உயர் பதவி யோகம் கிட்டும். கிடைத்த பதவியில் நேர்மையாக செயல்படுவீர். கல்வி வாய்ப்பு தேடிவரும். கம்ப்யூட்டர் கற்க்கலாம்.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles