.
.

.

இன்றைய ராசி பலன்கள் – 12.10.2017


12.10.2017 வியாழக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் புரட்டாசி மாதம் 26ம்தேதி.
கிருஷ்ணபட்சத்து(தேய்பிறை) ஸப்தமி திதி காலை 10.22 மணி வரைப் பின் அஷ்டமி திதி.
திருவாதிரை நட்சத்திரம் மதியம் 12.50 மணி வரைப் பின் புனர்பூசம் நட்சத்திரம்.
மரண யோகம் மதியம் 12.50 மணி வரைப் பின் அமிர்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை.
எமகண்டம்- 6 முதல் 7.30 மணி வரை.
நல்லநேரம்- மதியம் 3 முதல் 4 மணி வரை. மாலை 6 முதல் 7 மணி வரை. இரவு 8 முதல் 9 மணி வரை.
சூலம்- தெற்கு.
ஜீவன்- 1/2; நேத்திரம்- 2;

12.10.2017 வியாழக்கிழமை ராசிபலன்.

மேஷம்: அல்டிமேட் பவர் கிடைக்கும். புத்துணர்ச்சி. செயல் ஆற்றல். எதிர்ப்புகளைத் துச்சமாக கருதுவீர்கள்.

ரிஷபம்: மனைவி அருமை அன்பைப் புரிந்துகொள்வீர்கள். எதிர்காலம் சிறக்க புதிய திட்டத்தை தீட்டுவீர். பணம் சேமிக்கலாம்.

மிதுனம்: மனம் சிறகடித்து பறக்கும். காதல் மலரும். அன்பானவர்களைச் சந்திப்போம். புதிய i போன் வாங்கலாம்.

கடகம்: கலங்கம் தீரும். நண்பர்களைச் சந்தித்து குதுகுலம் அடைவோம். தலையனை சுகம் கிடைக்கும். பிரயாணம் சிறப்பு.

சிம்மம்: திரைகடலோடியும் திரவியம் சேர்க்கலாம். வெளிநாட்டிலிருந்து பணம் வரும். மறுதிருமண யோகம் கிட்டும்.

கன்னி: வேலைக் கிடைக்கும். சம்பளம் உயரும். கொடுத்த பணிகளை செவ்வேன செய்யுங்கள். இடமாற்றம் நன்மை.

துலாம்: நல்லவர்கள் சந்திப்பு. முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். குரு ஆசி கிடைக்கும். நல்ல காரியத்தை முன்னின்று நடத்துவீர்கள்.

விருச்சிகம்: அவநம்பிக்கை உருவாகும். மனச்சஞ்சலம் தோன்றும். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். திரு சாய்பாபா வழிபாடு செய்யுங்கள்.

தனுசு: மெர்சலான நாள். திருமணம் யோகம் கூடிவிட்டது. உறவுகளுக்குத் தகவல் சொல்லி திருமணம் வேலையை ஆரம்பிக்கலாம்.

மகரம்: கூட்டுத் தொழிலில் குதர்க்கம் தோன்றும் எல்லாம் நன்மைக்கே. பிரச்சனையை உங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

கும்பம்: குறிவைத்துத் தாக்குவீர்கள்.பழைய பகையை மறக்க மாண்டோம். பலருக்கும் உதவி செய்வீர்கள். வரவு வரும்.

மீனம்: இல்லத்தில் நவீன வசதிகள் உருவாக்கப்படும். விலை உயர்ந்த பொருள்கள் வாங்கி மகிழலாம். ஊர் போற்றும்.

நாளைச் சந்திப்போம்.

– ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Call – 9842521669. 9244621669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles