.
.

.

இன்றைய ராசி பலன்கள் – 12.3.2018


12.3.2018 திங்கட்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மாசி மாதம் 28ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து தேய்பிறை தசமி திதி மதியம் 12.20 மணி வரை பின் ஏகாதசி திதி.
பூராடம் நட்சத்திரம் காலை 10.33 மணி வரை பின் உத்திராடம் நட்சத்திரம்.
சித்த யோகம் காலை 10.33 மணி வரை பின் மரண யோகம்.
ராகுகாலம்- காலை 7.30 முதல் 9 மணி வரை.
எமகண்டம்- காலை 10.30 முதல் 12 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை 9 முதல் 10 மணி வரை.
சூலம்- கிழக்கு.
ஜீவன்- 1/2; நேத்திரம்-1;

12.3.2018 திங்கள்க்கிழமை ராசிபலன்.
மேஷம்: குழந்தைகள் தனி திறமைகளை கண்டுஅறிந்து ஊக்குவிப்பீர்கள். அருமையான திட்டங்கள் தீட்டுவீர். வரவு வரும்.
ரிஷபம்: அக்கம்பக்கத்தினருடன் தேவையற்ற சர்ச்சை உருவாகும். இன்று மாலை 5.10 மணி வரை சந்திராஷ்டமம். மாலைக்கு பின் நன்மை நடக்கும்.
மிதுனம்: சில தந்திரங்கள் கற்றுக்கொள்ளுவோம். இன்று மாலை 5.10 மணிக்கு பிறகு சந்திராஷ்டமம். ஸ்ரீ நெல்லையப்பர் தரிசனம் செய்யுங்கள்.
கடகம்: குடும்பத்தினர் எண்ணங்களை கேட்டு அறிந்து பூர்த்தி செய்வீர்கள். எல்லோருக்கும் நன்மை செய்வீர்கள். பிரதிபலனாக பாசத்தை தருவார்கள்.
சிம்மம்: பிள்ளைகளுக்கு நல்ல பாதையை உருவாக்கி கொடுப்பீர்கள். நெருங்கிய நண்பர்களிடம் மனம் விட்டு பேசுவோம். முயற்சி பலிக்கும்.
கன்னி: உங்களை நம்பியவர்களை வாழவைப்பீர்கள். மாற்றவர்களை திறமைகளை சிறப்பாக பயன்படுத்தி கொள்வார்கள். லாபம் பெருகும்.
துலாம்: கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். கணவன் மனைவி நெருக்கம் உண்டாகும். நவீன சாதனங்கள் வாங்கலாம்.
விருச்சிகம்: ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளை இழுத்து போட்டு செய்வீர்கள். வாக்குவாதத்தில் வெற்றி பெறுவீர்கள். அரசியல் பதவி தேடி வரும்.
தனுசு: நம்பிக்கை மிகுந்த நாள். புதிய தொழில் ஆரம்பிக்கலாம். லாபம் வர ஆரம்பிதக்கும். வங்கி லோன் முயற்சிகள் பலிக்கும்.
மகரம்: தேடுங்கள் கிடைக்கும். நல்லவர்கள் கூட பழகுவீர்கள். விஐபி அந்தஸ்து கொடுப்பார்கள். வேலை கிடைக்கும்.
கும்பம்: குழப்பம் தீரும். உங்கள் பேச்சுக்கும் மரியாதை கிட்டும். செயற்கரிய செயல் செய்து முன்னேற்ற பாதையில் செல்வோம்.
மீனம்: மாணவர்கள் புதிய படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். நல்ல மதிப்பெண் கிட்டும். பெண்கள் ஆசைகள் நிறைவேறும் ஆபரணங்கள் வாங்கலாம்.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles