.
.

.

இன்றைய ராசி பலன்கள் – 14.4.2018


14.4.2018 சனிக்கிழமை பஞ்சாங்கம். தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

தமிழ் புத்தாண்டு விளம்பி காலை 6.55 மணிக்கு பிறக்கிறது இந்த நேரத்தில் உலக நண்மைக்காக பஞ்சாங்கம் படிப்பது ஐதிகம்.
1193ம் ஆண்டு விளம்பி வருஷம் சித்திரை மாதம் 1ம்தேதி .
கிருஷ்ணப்பட்சத்து தேய்பிறை திரயோதசி திதி காலை 8.41 மணி வரை பின் சதுர்த்தசி திதி.
உத்திரட்டாதி நட்சத்திரம் பின்னிரவு 4.14 மணி வரை பின் ரேவதி நட்சத்திரம்.
சித்த யோகம் பின்னிரவு 4.14 மணி வரை பின் மரண யோகம்.
ராகுகாலம்- காலை 9 முதல் 10.30 மணி வரை.
எமகண்டம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை.
நல்லநேரம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. மாலை 5 முதல் 7 மணி வரை.
சூலம்-மேற்கு.
ஜீவன்-1/2; நேத்திரம்-0;
மாஸ சிவராத்திரி.
சென்னை குரோம்பேட்டை ஸ்ரீகுமரன் குன்றம் படித் திருவிழா.

14.4.2018 சனிக்கிழமை பஞ்சாங்கம். புதிய விளம்பி புத்தாண்டு வாழ்த்துக்கள்.

காலை 6.55 மணிக்கு விளம்பி புத்தாண்டு பிறக்கிறது. புத்தாண்டு பிறக்கும் நேரம் உலக நலனுக்காக பஞ்சாங்கம் படியுங்கள்.

மேஷம்: எல்லாம் வளமும் கிட்டும். திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணியர் தரிசனம் செய்யுங்கள்.
ரிஷபம்: லாபம் பெருகும். ஸ்ரீ மஹாலெட்சுமி அஷ்டோத்திரம் படியுங்கள்.
மிதுனம்: நல்ல வேலை கிடைக்கும். பலர் தொழில் தொடங்கலாம். ஸ்ரீ திருப்பதி வெங்கடாசலபதி தரிசனம் செய்யுங்கள்.
கடகம்: ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். தாயின் அன்பு பாசம் கிட்டும். மதுரை ஸ்ரீ மீனாட்சி தரிசனம் செய்யுங்கள்.
சிம்மம்: உயர் பதவி கிட்டும். அரசு வேலை கிடைக்கும். ஸ்ரீ நெல்லையப்பர் தரிசனம் செய்யுங்கள்.
கன்னி: திருமணம் நடக்கும். மனைவி அன்பு பாசம் கிட்டும். திருச்செங்கோடு ஸ்ரீ அர்த்தநாரிஸ்வரரை தரிசனம் செய்யுங்கள்.
துலாம்: கடன் அடையும் எதிர்ப்புக்கள் விலகும். ஸ்ரீ பழனி முருகனை வழிபடுங்கள்.
விருச்சிகம்: குடும்ப சுபிட்சம் கிடைக்கும். ஸ்ரீ வைத்திஸ்வரரை தரிசனம் செய்யுங்கள்.
தனுசு: சாதனை படைப்பீர்கள். லாபம் பெருகும். ஸ்ரீடி சாய்பாபா தரிசனம் செய்யுங்கள்.
மகரம்: வெளிநாட்டில் வேலை கிடைக்கும். பொருளாதார சிறப்பு. சோட்டாணிக்கரை ஸ்ரீபகவதி தரிசனம் சிறப்பு.
கும்பம்: திரவிய லாபம் பார்க்கலாம். எல்லாம் வெற்றி. ஆலங்குடி ஸ்ரீகுருபகவான் தரிசனம் சிறப்பு.
மீனம்: வெற்றி பயணம் ஆரம்பம் ஆதாயம் நிறைந்திருக்கும். திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வரர் தரிசனம் சிறப்பு.

எல்லா ராசியினருக்கும் எல்லா செல்வங்களும் சிறப்பாக கிடைக்க வாழ்த்துக்கள்.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles