.
.

.

இன்றைய ராசி பலன்கள் – 16.4.2018


16.4.2018 திங்கட்கிழமை பஞ்சாங்கம்.

1193ம் ஆண்டு விளம்பி வருஷம் சித்திரை மாதம் 3ம்தேதி.
அம்மாவாசை திதி காலை 7.57 மணி வரை பின் சுக்லப்பட்சத்து வளர்பிறை பிரதமை திதி.
அஸ்வினி நட்சத்திரம் பின்னிரவு 4.04 மணி வரை பின் பரணி நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- காலை 7.30 முதல் 9 மணி வரை.
எமகண்டம்- காலை 10.30 முதல் 12 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை.
சூலம்-கிழக்கு.
ஜீவன்-0; நேத்திரம்-0;

16.4.2018 திங்கட்கிழமை ராசிபலன்.

மேஷம்: வாழ்க்கையில் ஒழுக்கம் கடைப்பிடிப்போம். குழந்தைகளுக்கு ஒழுக்கம் கற்றுத் தருவோம். குடும்ப மரியாதை கூடும்.
ரிஷபம்: சிறப்பு சொற்பொழிவு செய்வீர்கள். உங்கள் பேச்சில் கருத்து இருக்கும். அந்தஸ்து மிக்கவர்கள் பாராட்டுவார்கள்.
மிதுனம்: திறமையான செயல் மூலம் வெளியுலகில் புகழ் பெறுவீர்கள். உறவுகள் ஒன்று கூடும். இடம் வாங்கி வீடு கட்டலாம்.
கடகம்; எதிர்பாராமல் பிரயாணம் உருவாகும். பிரயாணம் சந்தோஷத்தை கொடுக்கும். குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைவார்கள்.
சிம்மம்: அரசியல் செல்வாக்கு அந்தஸ்து கூடும். மக்கள் பணி ஆற்றலாம். மனம் சந்தோஷம் அடையும்.
கன்னி: பெண்களால் பிரச்சினைகள் உருவாகும். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ பத்ரகாளியம்மன் தரிசனம் செய்யுங்கள்.
துலாம்: திட்டமிட்டு காரியத்தை தொடங்கலாம். அது ராங்கா போகாது. தலைமை பதவி கிட்டும்.
விருச்சிகம்: புதிய நட்பை நாடுவோம். அந்த நட்பிடம் இருந்து அன்பு என்னும் மடல் வரும். ஹேப்பி.
தனுசு: நடிகரை சந்திப்போம் அறிமுகம் கிட்டும். ஆனந்தமான நேரம். மறக்க முடியாத தருணம்.
மகரம்; வேலை கிடைச்சாச்சு. வாழ்க்கை வசந்தம். அடுத்து திருமணம் பேசவேண்டியதுதான்.
கும்பம்: எதிர்பாராமல் திருப்பங்கள் உருவாகும். எல்லாம் நன்மைக்கே. உறவு கூடி வாழ்த்தும்.
மீனம்: முதன்மையான மதிப்பெண் வாங்கலாம். தேர்வு விளையாட்டு பணி எல்லாவற்றிலும் எதிர்க்க ஆள் இல்லை.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles