.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 2.12.2017


2.12.2017 சனிக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் கார்த்திகை மாதம் 16ம்தேதி
சுக்லப்பட்சத்து ( வளர்பிறை) சதுர்த்தசி திதி இரவு 12.12 மணி வரை பின் நிறைந்த பௌர்ணமி.
பரணி நட்சத்திரம் பகல் 11.12 மணி வரை பின் கார்த்திகை நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- காலை 9 முதல் 10.30 மணி வரை.
எமகண்டம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை.
நல்லநேரம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. மாலை 5 முதல் 7 மணி வரை.
சூலம்: கிழக்கு.
ஜீவன் -1; நேத்திரம்- 2;
திருக்கார்த்திகை.
ருத்திரதீபம்.
ஸ்ரீ அண்ணாமலை தீபம்.
ஸ்ரீகணம்புல்ல நாயானார் குருபூஜை.

2.12.2017 சனிக்கிழமை ராசிபலன்.

மேஷம்: நிறைவேறாத ஆசைகள் நிறைவேறும். அம்மாவின் பாசம் வெளிப்படுத்தும். சொத்துக்களை விற்கலாம் வாங்கலாம்.

ரிஷபம்; ஓளிமயமான வாழ்க்கை ஆரம்பமாகும். மனைவியின் பரிபூரண அன்பு பாசம் கிட்டும். மனைவி பெயரில் சொத்துக்கள் வாங்கி மகிழ்வார்கள்.

மிதுனம்: அக்கா தங்கைக்கு அன்பால் பரிசு பொருட்கள் வாங்கி கொடுப்பீர்கள். விருந்து உபசார கலைக்கட்டும். உறவுகள் பலப்படும்.

கடகம்: ஆரம்பிக்க நினைத்த தொழிலை குடும்பத்தினருடன் இனைந்து தொடங்கலாம். நல்ல சம்பாதிக்கலாம். வங்கி சேமிப்பு அதிகரிக்கும்.

சிம்மம்: அரசியல் செல்வாக்கு அந்தஸ்து கூடும். அரசியல் பயணமாக வெளிநாடு செய்வீர்கள். கான்ட்ராக்ட் தொழில் வருமானம் ப்ரசண்டேஜ் கிடைக்கும்.

கன்னி: குடும்ப சலசலப்பு உருவாகும். இன்று மாலை 4.44 மணி வரை சந்திராஷ்டமம். ஸ்ரீ அஞ்சனேயரை தரிசனம் செய்யுங்கள். இரவில் சலசலப்பு நீங்கும்.

துலாம்: உறவுகள் நண்பர்கள் வருகை தருவார்கள். இன்று மாலை 4.44 மணி முதல் சந்திராஷ்டமம். ஸ்ரீ மீனாட்சி தரிசனம் செய்யுங்கள்.

விருச்சிகம்: வாட்ஸ்ஆப் குருப் ஆரம்பத்து பல நல்ல தகவல்களை பகிர்ந்து கொள்வார்கள். வெளிநாட்டில் நல்ல நட்புக்கள் உருவாக்கி தொழில் முயற்சி வெற்றியடையும்.

தனுசு: வேலை மாற்றம் செய்யலாம். அரசு அதிகாரிகளுடன் நல்ல நட்பால் அரசு காரியம் எளிதில் முடிப்போம். மாணவர் விளையாட்டில் சாதனை படைப்பார்கள்.

மகரம்: கெட்டி மேளம் கொட்ட சுபநிகழ்ச்சி சிறப்பாக நடக்கும். மலை மேல் விற்றிருக்கு கோவில் சென்று வழிபாடு செய்யுங்கள்.

கும்பம்: முக்கிய மனிதர் சந்திப்பில் உங்கள் வாழ்க்கை நிலைமை மாற்றம் உருவாகும். ஊர் மாற்றம் செய்யலாம். நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும்.

மீனம்: ஐடி துறை வேலை வாய்ப்பு தேடிவரும். வாழ்க்கை அந்தஸ்து கூடும். ஒரே துறையில் பணியாற்றுபவர்கள் காதல் மணமுடிப்பார்கள்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles