.
.

.

இன்றைய ராசி பலன்கள் – 23.10.2017


23.10.2017 திங்கட்கிழமை பஞ்சாங்கம்.

1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஐப்பசி மாதம் 6ம்தேதி.
சுக்லப்பட்சத்து (வளர்பிறை) இன்று முழுவதும் சதுர்த்தி திதி.
அனுஷம் நட்சத்திரம் மதியம் 3.11 மணி வரைப் பின் கேட்டை நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- காலை 7.30 முதல் 9 மணி வரை.
எமகண்டம்- காலை 10.30 முதல் 12 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. மதியம் 3 முதல் 4 மணி வரை. இரவு 6 முதல் 8 மணி வரை.
சூலம்- கிழக்கு.
ஜீவன்- 1/2; நேத்திரம்- 0;
சதுர்த்தி விரதம். நாக சதுர்த்தி.
கரிநாள்.
நெல்லை கெட்வெல் ஸ அந்தநேய சுவாமி திருக்கோயில் வருஷாபிஷேகம்.

23.10.2017 திங்கட்கிழமை ராசிபலன்.

மேஷம்: நண்பர்களுடன் கருத்து மோதல் உருவாகும். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். திரு சதுர்த்தி விநாயகரைத் தரிசனம் செய்யுங்கள்.

ரிஷபம்: வெற்றி மீது வெற்றி வந்து சேரும். சகோதரர்கள் நண்பர்கள் அனைவரும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

மிதுனம்: அழகான பெண் அமையும். பார்த்தவுடன் பிடித்துவிடும். மனம் சிறகடித்து பறக்கும்.

கடகம்: அச்சம் என்பது மடமையடா! தைரியம் கூடும். திறமைகளைப் பயன்படுத்தி முன்னேறுவீர்கள்.

சிம்மம்: அறியாத விஷயங்களை அறிந்துகொள்வீர்கள். உயர்வுக்காக புதிய திட்டத்தைத் தீட்டுவீர்கள். குழந்தைகள் பாட்டு கற்றுக்கொள்வார்கள்.

கன்னி: மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்பதைக் கற்றுக்கொள்வீர்கள். கணினி வாங்கலாம் இதன் மூலம் வெளிநாட்டினர் வேலையை முடித்து டாலரில் சம்பாதிக்கலாம்.

துலாம்: ஊர் உலகம் சுற்றலாம். தொழில் புதிய வரவுகள் புதிய டெக்னாலஜி தெரிந்து தொழிலை நவீனப்படுத்தி நிறைவாக சம்பாதிப்பீர்கள்.

விருச்சிகம்: மனம் மாற்றம் உருவாகும். பலருக்கும் மரியாதை கொடுப்பீர்கள். இனிமையாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள்.

தனுசு: கடமையைச் சிறப்பாக செய்வீர்கள். உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்களுக்குத் தேடி சென்று நன்றி தெரிவிப்போம்.

மகரம்: பட்டாம்பூச்சி போல சிறகடித்துப் பறப்பீர்கள். அசைகள் அனைத்து நிறைவேறும். காதல் பிறக்கும். வேலைக் கிடைக்கும்.

கும்பம்: வேலை பார்த்து சிரமப்பட்டவர்கள் வேலையை விட்டுக் குறைந்த முதலீடு செய்து தொழில் ஆரம்பிப்பீர்கள். மாற்றம் முன்னேற்றத்தைக் கொடுக்கும்.

மீனம்: சந்தோஷம் அடைவார்கள். பெண்களுக்கு கிப்ட் வரும். ஆண்களுக்கு வேலைக் கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு மறைமுக தன்வரவு உண்டு.

நாளைச் சந்திப்போம்.

– ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Call – 9842521669. 9244621669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles