.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 24.11.2017


24.11.2017 வெள்ளிக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் கார்த்திகை மாதம் 8ம்தேதி.
சுக்லப்பட்சத்து (வளர்பிறை) ஷஷ்டி திதி பின்னிரவு 4.34 மணி வரை பின் ஸ்ப்தமி திதி.
உத்திராடம் நட்சத்திரம் காலை 8.09 மணி வரை பின் திருவோணம் நட்சத்திரம்.
சித்த யோகம் காலை 8.09 மணி வரை பின் மரண யோகம்.
ராகுகாலம்- காலை 10.30 முதல் 12 மணி வரை.
எமகண்டம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை.
நல்லநேரம்; காலை 6 முதல் 7 மணி வரை.
சூலம்- மேற்கு.
ஜீவன்- 1/2; நேத்திரம்- 1;
திருவோணம் விரதம்.
ஷஷ்டி விரதம்.

24.11.2017 வெள்ளிக்கிழமை ராசிபலன்கள்.

மேஷம்: ஊக்கமிகுந்த நாள். அந்தஸ்துள்ளவார்கள் உங்களை சந்திப்பார்கள். அரசியல் பதவி தேடி வரும். மக்கள் செல்வாக்கு பெருகும்.

ரிஷபம்: கிடைத்த உதவியை உதாசீனப்படுத்தாமல் பயன்படுத்தி கொள்ளுங்கள். வெளிநாட்டில் வேலை வாய்ப்பு அமையும் நல்ல சம்பளம் கிடைக்கும்.

மிதுனம்:பயண திட்டத்தை பாதியில் கைவிடுவீர்.இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீலட்சுமி நரசிம்மரை தரிசனம் செய்யுங்கள்.

கடகம்: நல்ல மாப்பிள்ளை அமையும். கல்யாண முடிந்த கையோடு வெளிநாட்டு பயணம் உருவாகும். பாஸ்போர்ட் எடுத்துக் கொள்ளுங்கள்.

சிம்மம்: குழந்தைகள் மழலை படிப்பு ஆனந்தமாக இருக்கும். அளவற்ற பாசத்தை வெளிகாட்டுவீர். பழைய நினைவுகள் அசைப்போடுவீர்.

கன்னி: மாணவர்கள் நன்றாக படிப்பார்கள். ஆசிரியர் பெற்றோர் வழிகாட்டுதல் அமையும். நல்ல செயல்களில் கவனம் செலுத்துவோம்.

துலாம்: புராண கதைகள் படிப்போம். அதன் கருத்துக்கள் மனதிற்கு இனம்புரியாத தாக்கத்தை உருவாக்கும். வீடு வாங்குவோம்.

விருச்சிகம்: வெகுகாலமாக கூட்டு குடும்ப வாழ்க்கையிலிருந்து விடுப்பட்டு வண்ணத்துப்பூச்சி போல் சிறகடித்து வெளிவருவோம். நாம் ஆசைப்பட்டபடி வாழ்வோம்.

தனுசு: பேராற்றல் உருவாகும். பொது வாழ்க்கையில் நல்ல காரியங்களை சிறப்பாக செய்வீர்கள். பாராட்டுக்கள் உத்வேகத்தை கொடுக்கும்.

மகரம்: மனம் கவர்ந்த நிகழ்ச்சிகள் நடக்கும். மனம் கவர்ந்தவர்களை சந்திப்போம். அன்பை வெளிப்படுத்துவோம்.

கும்பம்; அஞ்சாநெஞ்சன் சகேதரன் உதவி செய்வார்கள். வழக்கு முடிவுக்கு வரும் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும்.

மீனம்: வேலை தேடி வருகிறார்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். பழகியவர்கள் உத்திரவாதம் கொடுப்பார்கள். திருமணம் பாக்கியம் கிட்டும்.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles