.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 28.12.2017


28.12.2017 வியாழக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மார்கழி மாதம் 13ம்தேதி.
சுக்லப்பட்சத்து (வளர்பிறை) தசமி திதி இரவு 6.55 மணி வரை பின் ஏகாதசி திதி.
அஸ்வினி நட்சத்திரம் இரவு 8 மணி வரை பின் பரணி நட்சத்திரம்.
அமிர்த யோகம் இரவு 8 மணி வரை பின் சித்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை.
எமகண்டம்- காலை 6 முதல் 7.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 8 முதல் 9 மணி வரை. காலை 10.30 முதல் 12 மணி வரை. மதியம் 3 முதல் 4 மணி வரை. இரவு 6 முதல் 7 மணி வரை. இரவு 8 முதல் 10 மணி வரை.
சூலம்- தெற்கு.
ஜீவன்- 0; நேத்திரம்- 2;

28.12.2017 வியாழக்கிழமை ராசிபலன்.

மேஷம்: மேளதாளத்துடன் சுபநிகழ்ச்சி நடக்கும். விருந்தினர் வருகையால் இல்லம் சந்தோஷம் அடையும்.

ரிஷபம்- தீடிர் பணம் வரவு எல்லையில்லா சந்தோஷம் கிடைக்கும். கடன் அடைத்து நிம்மதி பெரூமுச்சு விடுவீர்கள்.

மிதுனம்: கடல் கடந்த நட்பு புதிய வாழ்க்கை அமைத்து தரும். முதன்முதலாக விமான பயணம் உருவாகும்.

கடகம்: சிறப்பான வாழ்க்கையை தேர்ந்துதெடுப்பீர்கள். இனிய இல்லறம் உதவும் உறவுகள். நிறைந்த அன்பு கிடைக்கும்.

சிம்மம்: குழந்தைகள் மேல் அன்பு பிரியம் காட்டுவோம். வழக்குகள் வெற்றி பெறும். பிறந்த ஊர்க்கு சொல்வோம்.

கன்னி: எதிர்பாராமல் எற்பட்ட தடைகளால் மனம் வருந்துவோம். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ சாய்பாபா வழிபாடு செய்யுங்கள்.

துலாம்: திறமையான நண்பர்கள் பலரையும் சந்திப்போம். தொழில் விருத்தி செய்யலாம் பயணத்தில் நல்ல தகவல்கள் கிடைக்கும்.

விருச்சிகம்: கம்ப்யூட்டர் LCD டிவி வாங்கலாம். வீட்டை அழகுபடுத்தி மகிழலாம். பலரையும் விருந்துக்கு அழைப்போம்.

தனுசு: நண்பர்கள் வாழ்க்கையில் உயர்ந்த அந்தஸ்து கிடைக்க நீங்கள் காரணமாக இருப்பீர்கள். அவர்கள் உயர்வு உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.

மகரம்: நீங்கள் மேற்கொண்ட ஆராய்ச்சி பலன் அளிக்கும். விருதுகள் பாராட்டுக்கள் கிடைக்கும். எதிர்பார்த்த நிலையை அடைவோம்.

கும்பம்: குழப்பம் தீரும். சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பீர்கள். வெற்றி பயணம் தொடரும்.

மீனம்; ஆலயம் வழிபாடு மன நிம்மதி தரும். கல்யாணம் முயற்சிகள் செய்வீர்கள். நல்ல வரன் அமையும்.

நாளை சந்திப்போம்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles