.
.

.

இன்றைய ராசி பலன்கள் – 28.5.2018


28.5.2018 திங்கட்கிழமை பஞ்சாங்கம்.

1193ம் ஆண்டு விளம்பி வருஷம் வைகாசி மாதம் 14ம்தேதி.
சுக்லப்பட்சத்து வளர்பிறை சதுர்த்தசி திதி இரவு 7.39 மணி வரை பின் நிறைந்த பௌர்ணமி திதி.
விசாகம் நட்சத்திரம் இரவு 12.01 மணி வரை பின் அனுஷம் நட்சத்திரம்.
மரண யோகம் இரவு 12.01 மணி வரை பின் சித்த யோகம்.
ராகுகாலம்- காலை 7.30 முதல் 9 மணி வரை.
எமகண்டம்- காலை 10.30 முதல் 12 மணி வரை.
நல்லநேரம்- இரவு வரை மரண யோகம் இருப்பதால் நல்லநேரம் குறிக்கப்படவில்லை.
சூலம்-கிழக்கு.
ஜீவன்-1; நேத்திரம்-2:
வைகாசி விசாகம்.
ஸ்ரீ திருவாய்மொழி ஆழ்வார் குருபூஜை.
ஸ்ரீ நம்மாழ்வார் குருபூஜை.
இன்று அக்னிநட்சத்திரம் முடிவு.

28.5.2018 திங்கட்க்கிழமை ராசிபலன்.

மேஷம்: மறுமலர்ச்சி உத்வேகம் பிறக்கும். அன்பால் அனைவரையும் அரவனைப்போம். இன்று மாலை 5.44 மணிக்கு பிறகு சந்திராஷ்டமம். மாலை ஸ்ரீ மாரியம்மன் கோவில் சென்று வழிபாடு செய்யுங்கள்.
ரிஷபம்: தொழில் விஷயமாக வெளியூர் சென்ற இடமெல்லாம் உங்களுக்கு சிறப்பு. எதிர்பாராமல் பல திருப்புமுனை உருவாகும். பணம் வரும்.
மிதுனம்: பழைய ஞாபகம் வருகிறது. இளமை காலத்தில் பழகியவர்களை சந்திப்போம் உரையாடுவோம். மனம் துள்ளும்.
கடகம்: இளம் பெண்களுக்கு கல்யாண கலை வந்து விட்டது. பெற்றோர்கள் அழகு அந்தஸ்துயுடைய மாப்பிள்ளை பார்த்து விட்டார்கள். இனி கெட்டி மேளம் கொட்டும்.
சிம்மம்; அரசியல் ஆர்வம் அதிகரிக்கும். முக்கிய அரசியல் கட்சியில் சேர்வீர்கள். பல சேவைகள் செய்வீர்கள் புகழ் கிட்டும்.
கன்னி; பணியில் இருந்த குறிக்கிடுகள் விலகும் குறித்த நேரத்தில் காரியத்தை முடிப்பார்கள். உறவுகள் கைக்கொடுக்கும்.
துலாம்: அரசியல் கட்சி தலைவர்களை சந்திப்போம். இளைஞர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். வருமானம் உயரும்.
விருச்சிகம்: போன மாச்சான் திரும்பி வந்தான் என பிரிந்த தம்பதியினர் ஒன்றினைவார்கள். இனிய இல்லாற வாழ்க்கைஆரம்பமாகும்.
தனுசு: பல நண்பர்களை தேடி சென்று சந்தித்து கூட்டாக சேர்த்து தொழில் ஆரம்பிக்க முயற்சி செய்வோம். கூட்டு முயற்சி வெற்றியடையும்.
மகரம்: பொது பிரச்சினையில் தலையிட்டு சிலமாற்றம் செய்வோம். பொதுமக்கள் செல்வாக்கு உயரும். தொழில் வரவு சிறப்பு.
கும்பம்: குழப்பம் தீரும். தேவையற்ற நட்புக்களை விட்டு விலகுவீர்கள். குடும்பத்தினர் மேல் அன்பு பாசம் காட்டுவார்கள்.
மீனம்: வெளிநாட்டில் தங்கியிருந்து வேலை தேடுவோம். இன்று மாலை 5.44 மணி வரை சந்திராஷ்டமம். ஸ்ரீகந்த ஷஷ்டி கவசம் படியுங்கள்.

நாளை சந்திப்போம்

Astro Daivegan MARIMUTHU office Chennai tuticorin. 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles