.
.

.

இன்றைய ராசி பலன்கள் – 3.12.2017


3.12.2017 ஞாயிற்றுக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் கார்த்திகை மாதம் 17ம்தேதி.
சுக்லப்பட்சத்து (வளர்பிறை) நிறைந்த பௌர்ணமி திதி இரவு 10.03 மணி வரை பின் கிருஷ்ணப்பட்சதத்து (தேய்பிறை) பிரதமை திதி.
கார்த்திகை நட்சத்திரம் பகல் 9.41 மணி வரை பின் ரோஹிணி நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- மாலை 4.30 முதல் 6 மணி வரை.
எமகண்டம்- மதியம் 12 முதல்1.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 9 மணி வரை. காலை 11 முதல் 12 மணி வரை. மாலை 6 முதல் 7 மணி வரை.
சூலம்- மேற்கு.
ஜீவன்- 1; நேத்திரம்- 2;
பாஞ்சராத்திர தீபம்.
பௌர்ணமி விரதம்.
கரிநாள்.
திருமங்கையாழ்வார் குருபூஜை.
ஸ்ரீ சுதர்சன ஜயந்தி.
திருப்பாணாழ்வார் குருபூஜை.

3.12.2017 ஞாயிற்றுக்கிழமை ராசிபலன்.

மேஷம்: நல்லவர்கள் சந்திப்போம் செல்போன் நம்பர் பரிவர்த்தனை செய்வோம். உறவுகளை உருவாக்குவோம். இனைந்து செயல்படுவீர்.

ரிஷபம்: அடிக்கடி பயணம் தொழில் முறையாக அமையும். புதிய தேடல் வாழ்க்கையில் சுபிட்சம் கிடைக்கும். தொழில் நுட்ப கல்வி கற்ப்போம்.

மிதுனம்: மனதில் தோன்றிய பயம் விலகும். நடக்காத காரியத்தையும் நடத்தி காட்டுவார்கள். நண்பர்களின் பாராட்டு மழையில் நனைவீர்கள்.

கடகம்: இன்றைய தலைமுறையினரை அனுசரித்து செல்வோம். தாத்தா பாட்டியின் உடல்நிலை கவனம் செலுத்துவோம். மகிழ்ச்சியான சம்பவம் நடக்கும்.

சிம்மம்: முன்னின்று சுபநிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். உறவுகள் இனைப்பீர்கள். பழைய சம்பவங்களை மறந்து எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

கன்னி: வெளிநாட்டில் கேட்டரிங் வேலை கிடைக்கும். முதல் முறையாக வெளிநாட்டு பயணம் உருவாகும். தெய்வ வேண்டுதல்களை நிறைவேற்றுவோம்.

துலாம்: நடக்க இருந்த காரியம் ஒத்திவைக்கப்பட்டது. இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ ஹயக்கீரிவர் தரிசனம் செய்யுங்கள்.

விருச்சிகம்: திருமணம் ஏற்படுகளை ஆரம்பிக்கலாம். எந்த தடையுமின்றி சிறப்பாக நடக்கும். எதிர்காலம் மனைவியுடன் செல்போனில் பேசலாம்.

தனுசு: லோன் முயற்சிகள் வெற்றியடையும். வாங்கிய இடத்தில் வீடு கட்டலாம். பாகப்பிரிவினை சிறப்பாக நடக்கும்.

மகரம்: பிள்ளைகள் படிப்புகேற்ற வேலை கிடைக்கும். சம்பளம் உயரும். வரன் பார்க்க ஆரம்பிக்கலாம். வாழ்க்கை அந்தஸ்து கூடும்.

கும்பம்: அலைந்து திரிந்து சொந்த வீடு வாங்கிவிடுவீர்கள். வாங்கிய வீட்டை அழகுபடுத்துவீர்கள். குடும்பத்துடன் குடியேறுவீர்கள்.

மீனம்: அன்பால் எல்லோரையும் அரவனைப்பீர்கள். விருந்தினரை நன்றாக கவனிப்பார்கள். சுற்றுலா சென்று மகிழலாம்.

நாளை சந்திப்போம்.

Astro தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles