.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 4.9.2017


4.9.2017 திங்கட்கிழமை

1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஆவணி மாதம் 19ம்தேதி சுக்லப்பட்சத்து (வளர்பிறை) திரயோதசி திதி மதியம் 12.26 மணி வரைப் பின் சதுர்த்தசி திதி.
திருவோணம் நட்சத்திரம் மதியம் 12.17 மணி வரைப் பின் அவிட்டம் நட்சத்திரம்.
அமிர்த யோகம் மதியம் 12.17 மணி வரைப் பின் சித்த யோகம்.
ராகுகாலம்- காலையில் 7.30 முதல் 9 மணி வரை.
எமகண்டம்- 10.30 மணி முதல் 12 மணி வரை.
நல்ல நேரம் – காலை 6 முதல் 7 மணி வரை.
மாலை 6 முதல் 7 மணி வரை.
ஓணம் பண்டிகை
ரிக் உபாகர்மம்
விருதுநகர் காரிசேரி திரு லட்சுமி நாராயண ஜெயந்தி

4.9.2017 ராசி பலன்கள்

மேஷம் : புதிய சொத்துக்கள் பத்திரப் பதிவு செய்வீர்கள். நிறைவான ஆதாய லாபம் கிடைக்கும். வங்கி சேமிப்பு உயரும்.

ரிஷபம் : வியாபாரம் இடமாற்றம் அமையும். திரையுலக வாய்ப்புகள் தேடி வரும். கட்டிட வேலைச் சிறப்பாக நடக்கும்.

மிதுனம்: இன்று முழுவதும் சந்திராஷ்டமம் வாகனத்தில் செல்லும் போது கவனம். திரு சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்யுங்கள்.

கடகம் : திருமணம் பேசி முடிப்பார்கள். சொந்த பந்தங்கள் இல்லம் நாடி வருவார்கள். குதுகுலமாக இருப்பீர்கள்.

சிம்மம்: கடன் கிடைக்கும். அளவோடு பேசுங்கள். கடிதம் மூலம் நல்ல செய்தி வரும்.

கன்னி : குழந்தைகள் சிறப்பாக படிப்பார்கள். பரிசுகள் வாங்குபவர்கள். வேலை வாய்ப்பு அமையும்.

துலாம் : சொந்த ஊரில் இடம் வாங்கி வீடு காட்டுவீர்கள். வேலையில் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும்.

விருச்சிகம் : எதிர்பாராமல் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலைக் கிடைக்கும். சொந்தக் காலில் நிற்பீர்கள். எதிர்காலம் மேல் புதிய நம்பிக்கை பிறக்கும்.

தனுசு : சுப நிகழ்ச்சி நடக்கும். குடும்பம் ஒன்றுபடும். சமுக அந்தஸ்து கிடைக்கும்.

மகரம் : திறமைகள் பளிச்சிடும். எதிர்பார்ப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த காரியம் நாளை நடக்கும்.

கும்பம் : இல்லத்தரசி அதிகம் செலவு செய்வார்கள். நண்பர்களுடன் சேர்த்து அரட்டை அடித்துப் பொழுதுபோக்குவோம். பிரயாணம் அருமை.

மீனம் : வரவு செலவு சமம். அலைச்சல் அதிகரிக்கும். வழக்குகள் சமரசமாக முடிப்பார்கள்.

நாளைச் சந்திப்போம்

– ASTRO THAIVEGAN MARIMUTHU OFFICE CHENNAI TUTICORIN. cel- 9842521669. 9244621669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles