.
.

.

இன்றைய ராசி பலன்கள் – 7.10.2017


7.10.2017 சனிக்கிழமை பஞ்சாங்கம்.

1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் புரட்டாசி மாதம் 21ம்தேதி.
கிருஷ்ணப்ட்சத்து(தேய்பிறை) துதியை திதி இரவு 9.38 மணி வரை பின் திருதியை திதி.
அஸ்வினி நட்சத்திரம் இரவு 8.23 மணி வரை பின் பரணி நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- காலை- 9 முதல் 10.30 மணி வரை.
எமகண்டம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை.
சூலம்- மேற்கு
நல்லநேரம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. மாலை 5 முதல் 7 மணி வரை.
ஜீவன்- 1; நேத்திரம்- 2;
ஸ்ரீ ருத்திரபசுபதியார் குருபூஜை.

7.10.2017 சனிக்கிழமை ராசிபலன்.

மேஷம்: வெற்றி நிறைந்த நாள். செல்வாக்கு உயரும். அரசியலில் பரிமான வளர்ச்சி அடையாளம். வாரிசு வேலை கிடைக்கும்.

ரிஷபம்: வங்கி கடன் கிடைக்கும். திட்டமிட்ட வேலைகள் செவ்வனே நடக்கும். அன்பை கொடுத்து அன்பை பெறுவீர்கள். பதவி உயரும்.

மிதுனம்: தொழிலாளர்களுக்கு சம்பளம் உயரும். திருமணம் காரியம் வேகம் பெரும். செல்வந்தர்கள் நட்பு இருப்பதால் தேவைக்கு பணம் வரும்.

கடகம்: கடல் கடந்த பயணம் உருவாகும். சிலருக்கு கப்பல் வேலை கிடைக்கும். மனம் கவர்ந்த பொருட்களை உடனே வாங்கிவீடுவீர்.

சிம்மம்: மங்கள நிகழ்ச்சிகள் இனிமையாக நடைபெறும். லெட்சுமி கடாட்சம் நிறைந்த நாள். குடும்பத்தை பிரிந்து சென்று வேலையில் அமர்வீர்.

கன்னி: இன்று முழுவதும் சந்திராஷ்டமம். சங்கடம் தீர ஸ்ரீ உச்சிஸ்ட்ட கணபதியை வணங்குங்கள். சில மாற்றம் செய்யலாம்.

துலாம்: பக்கத்து வீட்டினர் அன்பு பாசம் கிட்டும். அயல்நாட்டு வேலை உங்கள் இல்லத்தில் இருந்த முடித்துக் கொடுத்து நல்ல சம்பாதிப்பீர்.

விருச்சிகம்: ஊர் சுற்றலாம். பல புதிய விபரங்களை தெரிந்து கொள்வீர்கள். சில பிரமிப்பும் உண்டாகும். செலவைப் பற்றி கவலைப்படாதீர்கள்.

தனுசு: தானம் தர்மம் புண்ணியம் செய்வீர்கள். எனினும் அளந்து செய்யுங்கள். ஆலய தரிசனம் கிட்டும்.

மகரம்: மணவாழ்க்கை சிறக்கும். ஆசைகள் நிறைவேறும். பெண்களுக்கு உயர் கல்வி வாய்ப்பு தேடிவரும். தனம் சேரும்.

கும்பம்: வீண்வாதம் செய்யாதீர்கள். அமைதி சிறந்த மருந்து. தீயவர்களை புரிந்து செயல்படுவீர். எதிர்பாராமல் பணம் வரும்.

மீனம்: வியாபாரம் தொடங்கலாம். பணம் வரும். கடன் நிவர்த்தியாகும். உறவுகள் பலப்படும். நண்பர்களால் ஆதாயம் நிறைந்திருக்கும்.

நாளை சந்திப்போம்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles