.
.

.

Latest Update

“காவேரி புஸ்கரம்” என்றால் என்ன? அதன் சிறப்பு என்ன?


“காவேரி புஸ்கரம்” என்றால் என்ன? அதன் சிறப்பு என்ன? என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

இந்தியாவில் புஷ்கரம் மிகப் பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அதற்காக ஒரு புராண கதையும் கூறப்படுகிறது.

நவக்கிரகங்களில் ( ஒன்பது கோள்களில் ) ஒன்றாக குரு பகவான் பிரம்மனை நோக்கி கடும் தவம் செய்தான். அவனின் தவத்தை மெச்சிய பிரம்மன் தோன்றினான். குரு பகவானை நோக்கி “உனக்கு என்ன” வரம் வேண்டும் ” என்று கேட்டார். அதற்கு பதிலளித்த குருபகவான்,” எனக்கு தங்களுடைய புஷ்கரம் தான் வேண்டும்” என்று கேட்டார். குரு பகவானின் விருப்பப்படியே தன்னிடமுள்ள புஷ்கரத்தை அவருக்கு அளிக்க ஒப்புக் கொண்டார் பிரம்மன். ஆனால் புஷ்கரம் பிரம்மனை விட்டுப் பிரிந்து குருவிடம் செல்ல மறுத்தது. இதனால் தர்ம சங்கடமான பிரம்மன் புஷ்கரத்திற்கும் குரு பகவானுக்கும் இடையே ஒரு சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்தினார்.

அதன்படி மேஷ ராசி முதல் மீன ராசி வரை 12 ராசிகளிலும் அந்தந்த ராசிக்கு உகந்த புண்ணிய நதிகளில் புஷ்கரம் இருக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி புஷ்கரம் மேஷம் ராசியில் (கங்கை நதியிலும்),
ரிஷபம் ராசியில் (நர்மதை நதியிலும்),
மிதுனம் ராசியில் (சரஸ்வதி நதியிலும்),
கடகம் ராசியில் (யமுனை நதியிலும்),
சிம்மம் ராசியில் (கோதாவரி நதியிலும்)
கன்னி ராசியின் போது (கிருஷ்ணா நதியிலும்),
துலாம் ராசியில் (காவேரி நதியில்)
விருச்சிக ராசியில் (தாமிரபரணி ஆற்றிலும்),
தனுசு ராசியின் போது (சிந்து நதியிலும்),
மகரம் ராசியில் (துங்கபத்திரா ஆற்றிலும்),
கும்பம் ராசியில் (பிரம்ம நதியிலும்),
மீனம் ராசியில் (பிரணீதா ஆற்றிலும்)

என குருபகவான் எந்தெந்த ராசியில் பெயர்ச்சி செய்கிறாரோ அந்தந்த நேரத்தில் புஷ்கரம் அங்கு தங்கி இருக்கும்.

அப்போது பிரம்மா, விஷ்ணு, சிவன், இந்திரன் முதலான முப்பது முக்கோடி தேவர்கள் எல்லாம் இந்நதியில் தங்கியிருப்பார்கள் என்று உடன்படிக்கை செய்யப்பட்டது.

மேற்படி 12 நதிகளில் குரு பகவான் பிரவேசிக்கும் நேரத்தில் 12 நாட்கள் தொடர்ந்து நீராடுவது இந்தியாவில் உள்ள அனைத்து புனித நதிகளிலும் நீராடுவதற்கு சமம் என்று கூறப்படுகிறது.
இம்முறை குரு பகவான் துலாம் ராசியில் வரும் செப்டம்பர் 12 அன்று பிரவேசிப்பதால் காவேரி ஆற்றில் புஷ்கரம் கொண்டாடப்படுகிறது. மேலும் இம்முறை கொண்டாடப்படும் காவேரி புஸ்கரம் என்பது 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் காவேரி மகா புஸ்கரம் ஆகும். அதனால் வரும் செப்டம்பர் 12 அன்று தொடங்கி செப்டம்பர் 24 அன்று காவேரி ஆதி புஷ்காரமாகவும்.
செப்டம்பர் 25 அன்று தொடங்கி அக்டோபர் 7 வரை அந்திம புஸ்கரமாகவும் கொண்டப்படுகிறது. “கர்நாடகா” மற்றும்” தமிழ்நாடு” மாநிலத்தில் காவேரி புஷ்கரம் நடைபெறும் படித்துறைகள் வருமாறு.

தலைக்காவேரி (Talakaveri) – (கர்நாடகா)பாகமண்டலா ( Bhagamandala) (கர்நாடகா)
குஷால் நகர் (Kushalnagar) (கர்நாடகா)
ஸ்ரீரங்கப்பட்டினம் (Srirangapatna) (கர்நாடகா)
கிருஷ்ணராஜ் சாகர் அணை (Krishna Raj Sagar Dam) (கர்நாடகா)
மாண்டியா (Mandya) (கர்நாடகா)
ஷிவனசமுத்திரா (Shivanasamudra) (கர்நாடகா)
பன்னூர் (Bannur) (கர்நாடகா)
திருமாக்குடல் நரசிபுரா (Tirumakudal Narasipura) (கர்நாடகா)
தலக்காடு (Talakadu)
முடுகுத்தூர் (Mudukuthore) (கர்நாடகா)
கனகபுர் (Kanakapur) (கர்நாடகா)
மேட்டூர் (Mettur) (தமிழ்நாடு)
பவானி (Bhavani) (தமிழ்நாடு)
பள்ளிப்பாளையம்- ஈரோடு (Pallipalayam-Erode) (தமிழ்நாடு)
கொடுமுடி (Kodumudi) (தமிழ்நாடு)
பரமத்தி வேலூர் (Paramati Velur) (தமிழ்நாடு)
ஸ்ரீரங்கம் -திருச்சிராப்பள்ளி (Srirangam Tiruchirappalli) (தமிழ்நாடு)
திருவையாறு (Thiruvaiyaru) (தமிழ்நாடு)
தஞ்சாவூர் (Thanjavur) (தமிழ்நாடு)
சுவாமிமலை (Swamimalai) (தமிழ்நாடு)
கும்பகோணம் (Kumbakonam) (தமிழ்நாடு)
மயிலாடுதுறை (Mayavaram) (தமிழ்நாடு)
பூம்புகார் (Poompuhar) (தமிழ்நாடு)

மேலுள்ள ஏதாவது இடங்களில் அல்லது காவேரி நதி பிரயோகிக்கும் ஏதாவது ஒரு இடத்தில், காவேரி புஸ்கரம் நடைபெறும் இந்த புண்ணிய தினங்களில் (செப்டம்பர் 12 முதல் அக்டோபர் 7 வரை) புனித நீராடி எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெறுவோம்.

இறைவனால் நமக்கு கொடுக்கப்பட்ட இந்த மனிதப் பிறவியின் பயனை அனுபவிப்போம்.

திருச்சிற்றம்பலம்.

– ASTRO THAIVEGAN MARIMUTHU OFFICE CHENNAI TUTICORIN. cel- 9842521669. 9244621669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles