.
.

.

Latest Update

குரு பெயர்ச்சி பலன்கள் – கன்னி


குரு பெயர்ச்சி பலன்கள் – கன்னி

நட்சத்திரம் – உத்ரம் 2,3,4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதம்

2.9.2017 காலை 6.39 மணிக்கு கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்து 3.10.2018 வரை சஞ்சாரம் செய்ய இருக்கிறார். இந்த குரு பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும், அவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை பார்போம்

இதுவரை ஜென்மத்தில் இருந்த குரு பகவான் இப்பொழுது உங்கள் ராசிக்கு 2ம் இடத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். இதுவரை ஜென்மத்தில் இருந்த போது நீங்கள் கடும் உழைப்பை சிந்தி மற்றவர்களுக்கு ஒரு நம்பிக்கையான எடுத்தக்காட்டாக விளங்கி கொண்டிருப்பீர்கள். தற்போது தனஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடையும் குரு பகவானால் தாராளமான தன வரவை பெறுவீர்கள்.

பழைய கடன்களை பைசா பாக்கி இல்லாமல் பைசல் செய்து மகிழ்வீர்கள். தொழிலில் புது கிளைகள் ஆரம்பித்து விரிவு படுத்துவீர்க்ள். தொழில் மற்றும் உத்யோகத்தில் எல்லோரையும் வழி நடத்துகிற உயர் பதவியை அடைவீர்கள்.

குடும்பத்தில் கணவம் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உங்கள் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்குக்கூடிய சூழ்நிலை உருவாகும். மாணவர்களுக்கு கல்வி சிறப்பாக இருக்கும்.

பல், கண் போன்றவற்றில் பல நாளாக இருந்த பிரச்சினை தகுந்த வைத்தியத்தால் நிவர்த்தி ஆகும்

மொத்தத்தில் திறமைசாலி என்று பெயர் எடுப்பீர்கள். நல்ல சம்பாத்தியம் உண்டு. கவலைகள் நீங்கும், உடல் நலம் சிறப்படையும்.

சூரியனார் கோவிலுக்கு சென்று வழிபடுங்கள். திருப்பதி சென்று தரிசிக்கவும்.

அதிர்ஷ்ட எண்கள் 3,5
அதிர்ஷ்ட நிறங்கள் மஞ்சள், பச்சை
பலன்கள் சதவிதம் – 92%

– அஸ்ட்ரோ தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி.cel- 9842521669. 9244621669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )