.
.

.

Latest Update

குரு பெயர்ச்சி பலன்கள் – துலாம்


குரு பெயர்ச்சி பலன்கள் – துலாம்

நட்சத்திரம் – சித்திரை 3,4ம் பாதம், சுவாதி, விசாகம் 1,2,3ம் பாதம்

2.9.2017 காலை 6.39 மணிக்கு கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்து 3.10.2018 வரை சஞ்சாரம் செய்ய இருக்கிறார். இந்த குரு பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும், அவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை பார்போம்

இதுவரை விரைய ராசி ஆகிய 12ம் இடத்தில் இருந்து கொண்டு மருத்துவ விரையம் தொழில் முடக்கங்கள், பயண விரையங்கள் என உங்களை வாட்டிக்கொண்டிருந்த குரு பகவான், தற்போது உங்கள் ஜென்ம ராசியான துலாம் ராசிக்குள் வந்தமர்ந்து உங்கள் தோற்றத்தை மாற்ற போகிறார்.

உங்கள் முக வசீகரம் கூடி அனைவரையும் கவரக்கூடிய வகையில் பொழிவு பெறும். வசதியான வீட்டிற்கு குடிபோவீர்கள். உத்யோகத்தில் இடமாற்றம், ஊர்மாற்றம் வந்தால் தயங்காமல் ஏற்ற்க்கொள்ளுங்கள்.
அதிர்ஷ்டமான தொழில் வாய்ப்புகள் அமையும் காலம் இது.

வாழ்க்கை துணையோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறைந்து வாழ்வில் வசந்தம் வீசும் நேரம் இது. உத்யோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய தகுதி திறமைகளை வளர்த்து கொண்டு சிறப்பான நிலையை அடைவீர்கள். உங்களுடைய முயற்சிகளை சரியான பாதையில் செலுத்த குரு பகவான் ஒத்துழைப்பு கொடுப்பார்.

உடல்நலத்தை யோகா, நடைப்பயிற்சி முறையான சாப்பாட்டு பழக்கங்களால் முறை படுத்துங்கள்.

மொத்தத்தில் பளிச்சிடும் வசீகரத்துடன் முன்னேற்ற பாதையில் முந்தி செல்லும் நேரம் இது.

ஸ்ரீரங்கம் சென்று வழிபடுங்கள். ராகு கால துர்க்கை அம்மனை வழிபடுங்கள்

அதிர்ஷ்ட எண்கள் 3,6
அதிர்ஷ்ட நிறங்கள் வெண்மை, மஞ்சள்
பலன்கள் சதவிதம் – 50%

– அஸ்ட்ரோ தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி.cel- 9842521669. 9244621669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )