.
.

.

Latest Update

காஞ்சனா-2 திரை விமர்சனம்


04முனி‘, ‘காஞ்சனா’ அளவுக்கு காமெடி இல்லை. அந்த அளவுக்கு ரசிக்கிற பாடல்காட்சி இல்லை.(லாரான்ஸ் ஓபனிங் பாடல் தேவையே இல்லை) முந்தைய படங்களை விட கிராபிக்ஸ் காட்சிகள் அதிகம். ஆனாலும், அதிர வைக்கிறது காஞ்சனா 2. ‘முனி’யில் ராஜ்கிரண் கலக்கினார். காஞ்சனாவில் சரத்குமார் மிரட்டினார். காஞ்சனா 2வில் மாற்றுதிறனாளியாக நடித்து இருக்கும் நித்யாமேனன் முத்திரை பதித்து இருக்கிறார். தவிர, ஹீரோ கம் இயக்குனரான லாரான்ஸ் பெண் வேடம், பேய் வேடம், ஹீரோ வேடம் என்று வித்தியாசப்படுத்தியிருக்கிறார். பேய் சீரியல் எடுக்க செல்லும் இடத்தில் லாரான்ஸ், டாப்சியை பேய் பிடிக்கிறது. ஏன் பிடிக்கிறது. என்ன செய்கிறது என்பது கதை.
முந்தைய படங்களில் வில்லன்களுடன் பேய் மோதியது. இந்த படத்தில் வில்லன் பேயும், ஹீரோ பேயும் மோதுகிறது. இது தமிழ் சினிமா பேய்கதைகளில் புதுசு. கிளைமாக்சில் பின்னி எடுத்து இருக்கிறார் லாரான்ஸ். பேய் படங்களில் காமெடி செய்யலாம். பேய்களை காமெடிக்கும் உபயோகப்படுத்தலாம் என்ற டெக்னிக் காஞ்சனா 2வில் ஜெயித்து இருக்கிறது. லாஜிக் பார்க்காமல், கதை, திரைக்கதையை ரொம்ப ஆராய்ச்சி செய்யாமல் இரண்டரை மணி நேரம் ஜாலியாக சிரித்து, பயந்துவிட்டு வரலாம். பி.சி ரசிகர்கள் கொண்டாடுவார்கள். அக்கா கோவை சரளா வழக்கம்போல் சிரிக்க வைக்கிறார்.
தமிழ் சினிமால இதுவரை எத்தனையோ படங்களில் பார்க்காத கிளைமாக்ஸ் அதாவது பேய் படங்களில் கிராபிக்ஸ் பார்த்து இருக்கோம் ஆனால் இந்த படத்தில் பிரமிக்க வைத்து இருக்குறார் என்று தான் சொல்லணும் அழகு பொம்மையா வந்துகிட்டு இருந்த டாப்சி இந்த படத்துல நல்லா நடிச்சி இருக்காங்க என்று சொல்லாம்
முதல் பாதி போகும் வேகம் இரண்டாம் பகுதில கொஞ்சம் குறைவுதான் என்று சொல்லணும் அனாலும் ரசிக்க முடிகிறது முனி, காஞ்சனா. வரிசையில் இந்த பத்தியும் குழந்தைகளை தன்வசபடுத்துவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்ல கோடை விடுமுறைக்கு இது ஒரு கொண்டாட்டம்தான்

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles