.
.

.

Latest Update

தப்பை தட்டிக்கேட்கும் – “கொம்பன்”


அரசநாடு ஊரை சேர்ந்த எங்கு தப்பு நடந்தாலும் தப்பை தட்டி கேட்கும் கதாநாயகன் கொம்பையா பாண்டியன் செம்மைநாடு தலைவர் வில்லன் குண்டன் ராமசாமி மருமகனுக்காக அரசநாடு பதவிய கைப்பற்ற நினைக்கிறார் ஊர் ஏலத்தில் தலைவர் பதவி ஏலம் விடப்படுகிறது ஏலத்தொகை அதிகமாக போவது ஊருக்கு நல்லது இல்லை என்று சொல்லி ஏலம் கேட்ட இருவர் பெயர் சீட்டு எழுதி குலுக்கலில் போடப்படுகிறது அதில் கொம்பனின் ஆதரவாளர் தேர்வாகிறார். வில்லன் மருமகன் தோற்கிறார் மாமனார் மருமகனுக்கு இடையே உள்ள பந்தத்தை மிக அருமையா சொல்லி இருக்குறாரு இயக்குனரு படத்தில் எந்த விதமான ஆபாசம் இல்லாமல் எந்த சமுகத்தையும் பற்றி பேசாமல் அருமையான படம் தான் கொம்பன் தமிழ் சினிமாவில் எப்போவதாவது தான் இப்படி பட்ட நல்ல குடும்பக்கதை வருகிறது இப்படிப்பட்ட படத்தை சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்கவேண்டும். மாமனாராக வரும் ராஜ்கிரண் ஒரு காட்சில் சாதிய பத்தி பேசும் வசனம் மிக அருமை அரங்கமே கை தட்டி அதிருதுன்னு கூட சொல்லாம் அது என்ன வசனம் தெரியுமா கோவில் திருவிழாவிற்கு ஊர் ஜனம் வாங்க அண்ணே ஜாதி ஜனமே போறோம் நீங்க வரமட்டேன்கிறீங்களே என்று சொல்லும் போது ஜனம் மொத்தபேரும் போறோம்னு சொல்லு வர்றேன் சாதி வருதுனா வரமாட்டேன்னு சொல்லுவார். படத்தில் எங்குமே சாதி பத்தி சொல்லல நல்ல குடும்ப சித்திரம் தான் கொம்பன்.
கொம்பன் பல பிரச்சனைக்கு அப்புறம் இன்று மாலை முதல் திரைக்கு வருகிறது இந்த படத்தில் குறிப்பிட்ட சமூகத்தை தவறாக சித்தரிப்பதாக கூறி படத்தை வெளிவராமல் இருக்க பல விசயங்கள் செய்தனர் ஆனால் படத்தில் அப்படி ஒரு காட்சியும் இல்லை எதற்கு இப்படி தேவை இல்லாம டாக்டர் கிருஷ்ணசாமி பிரச்சினைய கிளப்பினார்னு தெரியவில்லை.அரசியல்வாதிகள் அவர்களுடைய விளம்பரத்திற்காக சினிமாவை பயன்படுத்த கூடாது. தமிழ்நாட்டில் போராட எவ்வளவோ இருக்கு……..

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles