.
.

.

Latest Update

நண்பேண்டா விமர்சனம்


நண்பேண்டா நிச்சயமாக ரெண்டரை மணி நேரம் அரங்கத்தில் உட்கார்ந்து கவலையை மறந்து சந்தோசமாக இருக்கலாம் என்பதற்கு உத்திரவாதம். உதயநிதி போன படங்கள் மாதிரி இந்த படத்திலும் காதல் காமெடி தான்
“கதை என்ன..?” என்றெல்லாம் கேட்டு சீரியஸாகி விடாதீர்கள். அப்படி ஒன்று இருப்பதை அவர்களே ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.. கொஞ்சம் கூட சீரியஸாக இல்லாத காமெடி நிகழ்ச்சிகளை முழுத் திரைக்கதையாக்க முடிவு செய்த அவர்களின் ‘தில்’ ரொம்பப் பெரியதுதான்..!
நண்பர்கள்…. வேறு யார், உதயநிதி ஸ்டாலினும், சந்தானமும்தான்..! முதலும், கடைசியுமாக கருணாகரன் நட்பு ஒன்றும் வந்து போகிறது. எப்போதோ செய்த 50 ரூபாய் உதவிக்காக, மாதாமாதம் சம்பளநாளில் தான் வசிக்கும் தஞ்சாவூரிலிருந்து சந்தானம் வேலை செய்யும் திருச்சிக்கு வந்து முழு சம்பளத்தையும் ‘ட்ரீட்’டாக வசூலித்துக் கொண்டிருக்கும் வேலையில்லாத உதயநிதி ஸ்டாலினுக்கு வந்த இடத்தில் நயன்தாரா மீது காதல் வர, என்ன ஆகிறது என்கிற லூட்டிகள்தான் படம் முழுதும்.
‘காமெடி, நட்பு, ஜாலி, காதல்…’ இவற்றின் காக்டெயில்தான் அலுக்காத ஃபார்முலா என்று கண்டுகொண்ட உதயநிதி ஸ்டாலின் அதே ரூட்டிலேயே பயணப்பட்டிருக்கும் இன்னொரு படம். அதற்குத் தோதாக தோள் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஏ.ஜெகதீஷ்.
உதயநிதி நடிப்பிலும் சரி நடனத்திலும் சரி பல மடங்கு தேர்ச்சி பெற்று இருக்கிறார் என்று சொல்லாம். எப்பவும் போல இந்த படத்திலும் பெருசா எந்த ரிஸ்க் எடுக்காமல் ரஸ்க் சாப்பிட்டிருக்கிறார் நயன்தாராவுடன் காதல் காட்சிகளிலும் பாடல் காட்சிகளிலும் செம கெமிஸ்ட்ரி
நயன்தாரா படத்துக்கு பெரிய சப்போர்ட் என்று சொல்லலாம் நடிப்பிலும் சரி அழகிலும் சரி நம்மளை பிரமிக்க வைக்கிறார் என்ன அழகு அதிலும் அவருக்கு கொடுத்து இருக்கும் ஆடைகள் அடேங்கப்பா எங்க இருந்தது வடிவமைத்தார்கள் என்று பிரமிக்க வைக்குது நயன்தாரா சம்பளத்தை விட அவருக்கு வாங்குன ஆடைகள் விலை அதிகமோ என்று நினைக்கவைக்குது
கருணாகரன் கொஞ்ச நேரம் வந்தாலும் அவர் பின்னி பெடல் எடுகுரருனு சொல்லலாம்
பால சுப்ரமணியம் ஒளிப்பதிவு கண்களுக்கு குளிர்ச்சி அடேங்கப்பா என்ன மாதிரி காட்சி அமைப்பு சூப்பர் சார்
மொத்தத்தில் நண்பேண்டா நமக்கு நண்பன்……………………

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles