.
.

.

Latest Update

புறம்போக்கு என்கிற பொதுவுடமை திரை விமர்சனம்


Purampokku-Posters-610x330யூடிவி மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில், எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில், ரோஹாந்த் கதையமைப்பில், ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா நடிப்பில், வர்ஷன் இசையமைப்பில், ஸ்ரீகாந்த் தேவாவின் பிண்ணனி இசையில், ஏகாம்பரத்தில் ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் படம் புறம்போக்கு என்கிற பொதுவுடைமை

இயற்கையில் காதலை பற்றியும், ஈ படத்தில் சேரியின் பிண்ணனியில் மருத்துவ போரை பற்றியும், பேராண்மையில் மலைவாழ் மக்களின் பிண்ணனியில் பொருளாதார போர் பற்றியும், மேல்வர்கத்தின் ஆதிக்கத்தை பற்றியும் கூறிய இயக்குனர் எஸ்.பி.ஜன்நாதன் இப்படத்தில் போராளிகளின் பிண்ணனியில் தூக்கு தண்டனைக்கு எதிரான தன் அஸ்திரத்தை எடுத்திருக்கிறார். போராளியான ஆர்யாவிற்க்கு தூக்கு தண்டனை அளிக்கிறது உச்ச நீதிமன்றம். அதை நிறைவேற்றும் காவலதிகாரியாக ஷாம், அவரை தூக்கிலிடுபவராக விஜய் சேதுபதி, அவரை சிறையிருந்து தப்பிக்க வைக்க முயற்ச்சிக்கும் ஆர்யாவின் இயக்கத்தை சேர்ந்த போராளியாக கார்த்திகா. முடிவில் ஆர்யா தப்பித்தாரா என்பதை மிக அற்புதமாக காட்டியிருக்கிறார் ஜனநாதன்.

தூக்கு தண்டனை கதை களமாக இருந்தாலும், டைட்டிலில் இந்தியாவை எப்படி அன்னிய சக்திகள் குப்பை மேடாக மாற்றியமைக்கின்றன என்பதையும், ஆங்காங்கே நமது இந்திய அரசியல் சாசந்த்தை பற்றியும், காவல் துறை நினைத்தால் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்பதையும் பிரமாதமாக எடுத்துக்காட்டியிருக்கிறார். இது வரை எத்தனையோ படங்களில் சிறைச்சாலைகளை பற்றி எடுத்திருந்தாலும் இயக்குனர் ஜன்நாதன் இப்படத்தில் சிறைசாலையினை பற்றியும் அதில் இருக்கும் மர்மங்களை பற்றியும் எடுத்து காட்டியிருக்கிறார். வசனங்கள் ஒவ்வொன்றும் சாட்டையடியாக வந்து விழுகின்றன. இப்படத்திற்க்கு ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு மிகப்பெரிய பலம். கலை இயக்குனர் செல்வகுமாரின் சிறைச்சாலை அமைப்பிற்க்கு நமது மிகப்பெரிய பாராட்டு. பின்னி மில்ஸை அவ்வளவு பிரமாதமாக சிறைசாலையாக மாற்றியமைத்திருக்கிறார். பிண்ணனி இசையில் தனது திறமையை நிரூபித்திருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா. வர்ஷனின் இசையில் பாடல்கள் நன்றாக உள்ளது.

நான் கடவுள் பட்த்திற்க்கு பிற்கு இப்பட்த்தில் சிறப்பாக நடித்திருக்கிறார் ஆர்யா. அவர் திரையுலக வாழ்கையில் இப்படம் ஓர் மைல் கல் என்றே கூற வேண்டும். அவரது நடிப்பு கண்டிப்பாக அவரை அடுத்த கட்டத்திற்க்கு எடுத்து செல்லும். ஷாம் நீண்ட இடைவெளிக்கு பின் இப்படத்தில் நடித்திருந்தாலும், கூறிக்கொள்ளும் வகையில் நடித்துள்ளார் என்பதை விட அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்றே கூற வேண்டும். விஜய் சேதுபதியின் நடிப்பை பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. இப்படத்திலும் பிரமாதமாக நடித்திருக்கிறார். வழக்கமாக போக பொருளாகவே வந்து போகும் தமிழ் சினிமாவில், கார்த்திகாவிற்க்கு இதில் அருமையான கதாபாத்திரம். அதை முழுமையாக பயன்படுத்தி தனது நடிப்பு திறமையை காட்டியுள்ளார் கார்த்திகா.

மொத்தத்தில் புறம்போக்கு அனைவரும் பார்த்து மகிழ்ந்து நெக்குருகி மெய்சிலிர்க்கும் படம்.

புறம்போக்கு – இந்திய மக்களின் பட்டா

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles