.
.

.

இளையராஜா இசையில் ஹரிகுமார் நடிக்கும் படம் “ மதுரைமணிக்குறவன் “


காளையப்பா பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக கே.ஜி.காளையப்பன் தயாரிக்கும் படம் “ மதுரை மணிக்குறவன் “
Mathurai Manikuravan Movie Stills (13)இரட்டை வேடங்களில் நடிக்கும் ஹரிகுமார் இந்த படத்திற்காக சில பிரத்யேக பயிற்சிகளை எடுதுக் கொண்டிருக்கிறார். தோற்றத்திலும் உடல் வாகு, மற்றும் நடை, உடை பாவனையிலும் வித்தியாசத்தை காட்டி நடித்து வருகிறார்.
கதாநாயகியாக மாதவிலதா நடிக்கிறார். மற்றும் ரிஷிதா, பவித்ரா ஆகியோரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். மற்றும் சரவணன், சுமன், கே.ஜி.காளையப்பன், சுஜாதா, அனுமோகன், எம்.எஸ்.பாஸ்கர், டெல்லிகணேஷ், போண்டாமணி, முத்துக்காளை, ஐவரி.கே.சண்முகம் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – ஆர்.கே.பிரதாப்
இசை – இளையராஜா
கலை – முருகன் / எடிட்டிங் – வி.டி.விஜயன்
ஸ்டன்ட் – ஜாக்குவார் தங்கம் / வசனம் – வெற்றி
தயாரிப்பு மேற்பார்வை – போடி விஜயகுமார்
எழுதி இயக்குபவர் – ராஜரிஷி
தயாரிப்பு – கே.ஜி.காளையப்பன்
படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
படம் பற்றி இயக்குனர் ராஜரிஷியிடம் கேட்டோம்… அந்தந்த பகுதிகளில் மக்களின் பிரச்சனைகளுக்கு போராடி வட்டரா மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான மலையூர் மம்பட்டியான், சீவலப்பேரி பாண்டி, போன்று மதுரை மணிக்குரவனும் ஒருவன். மண் சார்ந்த மனிதனின் வாழ்க்கைக்கு இளையராஜாவின் இசை சிறப்பாக இருக்கும் என்று அவரை அணுகினோம். அவரும் கதையை கேட்டு கதைக்கு உயிரூட்டுகிறேன் என்று அருமையாக டியூன் போட்டுக் கொண்டுத்திருக்கிறார். அது எங்கள் யூனிட்டுக்கு கிடைத்த முதல் வெற்றி என்றார் இயக்குனர் ராஜரிஷி.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles