.
.

.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகும் “புருஸ்லீ – 2”


Bruce Lee 2  Movie Stills (4)புருஸ்லீ – 2 இசை வெளியீட்டு விழா, மகேஸ்பாபு அவர் நடித்த செல்வந்தன் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சென்னைக்கு வந்தார். தொடர்ந்து தற்போது ராம்சரண் நடித்திருக்கும் “ புருஸ்லீ – 2 “ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு ராம்சரண் சென்னை வருகிறார்.இந்த இசை வெளியீட்டு விழாவில் ராம் சரண், நாயகி ரகுல்பிரீதி சிங், நதியா, சம்பத், மற்றும் படத்தின் இயக்குனர், இசையமைப்பாளர் என புருஸ்லீ 2 படக்குழு அனைவரும் கலந்து கொள்கிறார்கள். மற்றும் ஏராளமான தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். இசை வெளியீட்டு விழா வருகிற வெள்ளிகிழமை அன்று காலை 10 மணிக்கு சென்னையில் நடைபெற இருக்கிறது. இந்த படம் வருகிற 16 ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகிறது. இந்த படத்தை தமிழில் தயாரித்து வெளியிடுபவர் பத்ரகாளி பிலிம்ஸ் பத்ரகாளி பிரசாத்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )