.
.

.

திகில் கலந்த நகைச்சுவை. உருவாகிய தமிழ் படங்களின் வரிசையில் “சங்கிலி புங்கிலி கதவ தொற”


மூன்று மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து இருக்கின்றது, ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தின் டீசர்

திகில் கலந்த நகைச்சுவை பாணியில் உருவாகிய தமிழ் படங்களின் வரிசையில், இத்தகைய எண்ணிக்கையை இவ்வளவு குறைவான நேரத்தில் பெற்று இருக்கும் முதல் தமிழ் திரைப்படம் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’

திகில் கலந்த நகைச்சுவை பாணியில் உருவாகி இருக்கும் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ திரைப்படத்தின் டீசர் தற்போது பேஸ்புக்கில் 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களையும், ‘யுடியூபில்’ 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களையும், என மொத்தம் 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி அன்று வெளியான இந்த படத்தின் 46 நொடிகள் ஓடக்கூடிய டீசர், சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை திகில் – நகைச்சுவை கதைக்களங்களில் உருவான தமிழ் திரைப்படங்களின் வரிசையில், இத்தகைய எண்ணிக்கையை இவ்வளவு குறைவான நேரத்தில் பெற்று, புதியதொரு சாதனையை இந்த திரைப்படம் பெற்று இருக்கின்றது. அதுமட்டுமின்றி இந்த பாணியில் இந்நாள் வரை வெளியான மற்ற மொழி படங்களின் சாதனையை பார்க்கும் பொழுது, ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ திரைப்படம் இரண்டாம் இடத்தில் இருக்கின்றது. மேலும் ஜீவா நடித்த படங்களில், இந்த திரைப்படம் தான் இத்தகைய அமோக எண்ணிக்கையை பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

‘பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்’ மற்றும் ‘ஏ பார் ஆப்பிள்’ நிறுவனத்தின் சார்பில் அட்லீ இணைந்து தயாரித்து, அறிமுக இயக்குநர் ஹைக் இயக்கி இருக்கும் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தில், ஜீவா – ஸ்ரீதிவ்யா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ரசிகர்களின் இத்தகைய அமோக வரவேற்பையும், பாராட்டுகளையும் பார்க்கும்பொழுது, இந்த ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ திரைப்படம் வெற்றி சிகரத்தை நோக்கி பயணிக்கிறது என்பதை எந்தவித சந்தேகமுமின்றி சொல்லலாம்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles