.
.

.

Latest Update

இசை மாமேதை ‘பாலமுரளி’ கிருஷ்ணா அவர்களின் அறக்கட்டளை இசைஞானி இளையராஜா தொடங்கிவைத்தார்.


மறைந்த இசை மாமேதை பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் அறக்கட்டளை சென்னையில் நிறுவப்பட்டது. இந்த அறக்கட்டளையை இசைஞானி இளையராஜா தொடங்கிவைத்தார். இவ்விழாவில் திரு.T.V.
கோபாலகிருஷ்ணன், திரு. நல்லி குப்புசாமி செட்டி ,திருமதி. சுதா ரகுநாதன் , திரு.உன்னி கிருஷ்ணன் மற்றும் cleaveland சுந்தரம் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

இவ்விழாவில் திரு.நல்லி குப்புசாமி செட்டி அவர்கள் பேசுகையில்,” பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் ஒரு இசை மாமேதை. ஒரு முறை நான் அவரிடம் , உங்கள் இசை கச்சேரிகளில் வாசிக்கும் கலைஞ்சர்கள் எல்லாம் பதட்டமாக இருக்கையில், நீங்கள் மட்டும் எப்படி இப்படி பதட்டமே இல்லாமை அமைதியாக இருக்கிறீர்கள் என கேட்டேன். அதற்கு அவர், ” இசை சரங்கள் மட்டும் தன் பதட்டமாக இருக்கவேண்டுமே ஒழிய , அதை மீட்டும் விரல்கள் பதட்டமாகக்கூடாது ” என புன்னகையுடன் கூறினார். இசைஞானி இளையராஜா அவர்கள் இந்த அறக்கட்டளையை தொடங்கிவைத்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. பின்னணி இசையில் உலகிலேயே சிறந்தவர் இளையராஜா அவர்கள். ”முந்தானை முடிச்சு” படத்தின் பின்னணி இசையை மூன்றே மணி நேரத்தில் செய்து முடித்தார் என்பதை கேள்விப்பட்டபோது ஆசிரியத்தில் உரைத்தேன்”இசைஞானி இளையராஜா பேசுகையில் , ” பாலமுரளி கிருஷ்ணா சாரின் இசையறிவு மட்டும் இசையாளுமை ஒப்பற்றது. ஒரு முறை பாலமுரளி கிருஷ்ணா அவர்களும் பீம் சிங் ஜோஷி அவர்களும் ஒரு பாட்டு ரெகார்டிங்காக வந்திருந்தார்களாம். தனது வழக்கமான பாணியான காபி மற்றும் மோர்களை அருந்திக்கொண்டிருந்த பாலமுரளி அவர்கள் , அவற்றை பீம் சிங்கிற்கும் வழங்கியுள்ளார். தன் குரல் வளத்தை அவை பாதிக்கும் என பயந்து அவற்றை அருந்த பீம் சிங் மறுத்த பொது , ”இந்த சாதாரண காபி மற்றும் மோரெல்லாம் உன் குரல் வளத்தை எளிதில் பாதிக்கும் என்றால் எப்படி ஏழு ஸ்வரங்களும் உனக்கு அடிபணியும்” என கிண்டலாக கேட்டாராம் பாலமுரளி அவர்கள் . இந்த அறக்கட்டளையை தொடங்கிவைத்ததில் எனக்கு மாபெரும் பெருமை. மற்ற எல்லா இசை வடிவங்களை விட கர்நாடக சங்கீதமே மேலானது என நம்புகிறேன். கடவுள் நம்மிடமிருந்து பாலமுரளி அவர்களை சீக்கிரமே எடுத்துக்கொண்டாலும் , அவரது புகழும் சாதனைகளும் காலத்தால் அழிக்க முதியாதவை ஆகும் ”இந்நிகழ்ச்சியில் ஆந்திர பிரதேச மாநில அரசு, பாலமுரளி கிருஷ்ணா அறக்கட்டளை மூலம் இசை மாணவர்கள் பயன் பெற ஆண்டுதோறும் ஒரு லட்சம் ருபாய் தருவதாகவும் , அவர்களின் அரசு இசை கல்லூரியை ‘பாலமுரளி கிருஷ்ணா இசை கல்லூரி ‘ என பெயர் மாற்றப்போவதாகவும் , அவரது பிறந்தநாளை ஆந்திர பிரதேசத்தின் இசை நாளாக கொண்டாடப்போவதாகவும் அறிவித்தனர்.

இந்த அறக்கட்டளையின் அறங்காவலர்கள் திரு.மங்கலம்பள்ளி அபிராம் , டாக்டர். மங்கலம்பள்ளி சுதாகர், டாக்டர் .வம்சி மோகன் , டாக்டர்.கே.கிருஷ்ணகுமார் மற்றும் திரு,விபு பாலமுரளி ஆவர் .⁠⁠⁠⁠

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles